ரன்களை வாரி வழங்கிய வள்ளல் பிரசித் கிருஷ்ணா.. அடுத்த டெஸ்டில் பாருங்க.. கேலி, கிண்டலுக்கு பதிலடி

0
90

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததே காரணம். முதல் இன்னிங்சில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் எந்த வீரரின் பந்து வீச்சும் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 20 ஓவர்கள் வீசி 128 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸில் 15 ஓவர்கள் வீசி 92 ரன்கள் அவர் விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -

இதனால் இங்கிலாந்து அணி அபாரமாக இந்த டெஸ்டில் வெற்றியை பெற்றது. பிரசித் கிருஷ்ணா ஐந்து விக்கெட்டுகளை முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தமாக வீழ்த்தினாலும், அவர் அதிகமாக ரன்கள் விட்டுக் கொடுத்தது மிகப்பெரிய சிக்கல் ஆக மாறியது. இதனால் பலரும் பிரசித் கிருஷ்ணாவை கேலி கிண்டல் செய்தார்கள்.

எக்னாமி ரேட்டை குறைப்பேன்:

இந்த நிலையில் இது குறித்து மௌனம் களைத்துள்ள பிரசித் கிருஷ்ணா, “எனக்கு இருந்த பிரச்சனை குறித்து நான் பல வீரர்களுடன் பேசினேன். நிச்சயமாக என்னுடைய எகனாமி ரேட்டை குறைக்க நான் முயற்சி செய்து வருகின்றேன். நான் செய்த தவறில் இருந்து பாடம் கற்று வருகிறேன்.”

- Advertisement -

“இது நான் செய்த தவறுதான் இதை தவிர என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது. நான் என்னுடைய பந்துவீச்சை மெருகேற்றுவது என்னுடைய பொறுப்பு. அதைத்தான் நான் முயற்சி செய்வேன். அதற்கு தான் நான் முயற்சி செய்து வருகின்றேன். நான் சரியான உழைப்பை களத்தில் வெளிப்படுத்தியும் வருகின்றேன்.”

கம்பேக் கொடுப்பேன்:

“நிச்சயமாக அடுத்த டெஸ்ட் போட்டியில் நான் கம்பேக் கொடுப்பேன். எப்போதெல்லாம் நான் பந்துவீச வருகிறனோ, அப்போது எல்லாம் நான் மெய்டன் ஓவரை வீச வேண்டும் என்று தான் நினைப்பேன். பவுண்டரிகளை வழங்க வேண்டும் என்று நான் முயற்சி செய்வது கிடையாது. அந்த ஆடுகளத்தில் பவுண்டரி அருகே மைதானம் அபாரமாக இருந்தது.”

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியனுக்கே இது தான் கதி.. 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.. ஜிம்பாப்வேவிடம் அடிவாங்கிய தென்னாப்பிரிக்கா

“அந்த மைதானத்திற்கு ஏற்ற வகையில் நான் பந்து வீசவில்லை என்பது தான் உண்மை. இதை பயன்படுத்தி இங்கிலாந்து வீரர்கள் ரன் சேர்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் சில பந்துகள் எட்ஜாகி பௌண்டரிக்கு சென்றது. நான் பவுன்சர்கள் வீச முயற்சி செய்தேன்.அந்தப் பந்துகள் எல்லாம் பவுண்டரிக்கு எட்ஜ் ஆகி சென்றது. இனி அடுத்த டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவு ரன்களை  விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

- Advertisement -