இந்திய அணியின் அந்த விஷயத்தை அம்பலப்படுத்தி ஜெயிப்போம்.. 1,30,000 பேர் முன்னிலையில் நடக்கும் – தெ.ஆ பயிற்சியாளர் சவால்

0
9
Conrad

நாளை இந்திய அணி டி20 உலகக் கோப்பை இரண்டாவது சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியை வெல்வோம் என தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் சவால் விட்டிருக்கிறார்.

மேலும் சமீபத்தில் இந்தியா வந்த தென் ஆப்பிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்திய அணி வென்ற போதும் கூட தென் ஆப்பிரிக்கா அணிக்கு அது நல்ல பயிற்சியாக அமைந்தது. அதை பயன்படுத்துவோம் என கூறியிருக்கிறார்.

- Advertisement -

அம்பலப்படுத்துவோம்

மேலும் தென் ஆப்பிரிக்க அணி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் சில போட்டிகளை தொடர்ந்து விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணி தனது கடைசி போட்டியை நெதர்லாந்து அணிக்கு எதிராக இதே மைதானத்தில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சுக்ரி கான்ராட் கூறும் பொழுது ” இந்திய அணிக்கு எதிராக விளையாடும் பொழுது நிறைய ஆய்வு மற்றும் விமர்சனங்கள் இருக்கவே செய்யும். மேலும் இந்திய அணி கண்டிப்பாக செமி பைனல் மற்றும் பைனலுக்கு செல்ல வேண்டிய அழுத்தத்தில் உள்ள அணி. எனவே அவர்களுக்கு இருக்கும் இந்த அழுத்தத்தை நாங்கள் அம்பலப்படுத்தி அவர்களை வெல்வோம்”

- Advertisement -

இது உதவியாக அமைந்தது

“நாங்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் எங்களுக்கு பல வகைகளில் நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கிறது. நாளை மைதானத்தில் ஒரு லட்சத்தை 30 ஆயிரம் ரசிகர்கள் நீல நிற ஜெர்சியில் இருப்பார்கள். மிகப்பெரிய உற்சாகம் காணப்படும். ஆனால் நாங்கள் இதற்கு பழகி விட்டோம். இதைத் தாண்டி எதிர்கொண்டு இந்திய அணியை வெல்வோம்”

இதையும் படிங்க : 2வது சுற்று தெ.ஆ.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 2 புதிய வீரர்கள் சேர்ப்பு.. கம்பீர் கணக்கில் மாற்றம் – முழு அலசல்

“ஒரு பெரிய அணிக்கு எதிராக விளையாடும் பொழுது அந்த அணிக்கும் அழுத்தம் இருக்கும் என்பதை நாம் மறந்து விடுகிறோம். உண்மையில் இந்திய அணிக்கு நிறைய அழுத்தம் இருக்கிறது. அதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். அதை வைத்து நாங்கள் அவர்களை வெல்வோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -