நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் நாளை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டாவது சுற்று முதல் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்கு எப்படியான பிளேயிங் லெவன் அமையும்? என்று பார்க்கலாம்.
இந்த போட்டியில் நாளை இரவு 7 மணிக்கு குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டாவது சுற்றில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.
பலம் பலவீனங்கள்
தற்போது இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளின் பேட்டிங் யூனிட் இரண்டுமே சம பலத்தில் உள்ளது. அதே சமயத்தில் பவுலிங் யூனிட்டை பொருத்தவரையில் தென் ஆப்பிரிக்காவை விட இந்தியா கொஞ்சம் முன்னிலையில் இருக்கிறது. இந்திய அணிக்கு இது சாதகமான விஷயமாக அமைந்திருக்கிறது.
மேலும் இந்திய அணியில் அபிஷேக் சர்மா இதுவரை ரன் எடுக்காததும், திலக் வர்மா பெரிய ஸ்ட்ரைக்ரேட்டில் ரன் எடுக்காததும் சிக்கலை கொடுக்கிறது. எனவே இந்திய அணி நிர்வாகம் இதை மனதில் வைத்து சில மாற்றங்களை கொண்டு வரும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இரண்டு முக்கிய மாற்றங்கள்
தற்போது திலக் வர்மா அதிரடியாக விளையாடாத காரணத்தினால், சஞ்சு சாம்சனை அபிஷேக் ஷர்மா உடன் தொடக்க ஆட்டக்காரராக கொண்டு வந்து, மூன்றாவது இடத்தில் இஷான் கிஷானை விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தென் ஆப்பிரிக்க அணியில் நிறைய இடதுகை வீரர்கள் இருக்கின்ற காரணத்தினால், இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அக்சர் படேல் இடத்தில், வலதுகை சுழல் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தரி விளையாட வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு மாற்றங்கள் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இதையும் படிங்க : ஷிவம் துபே மிஷன் தொடங்கி ஒரு வருஷம் ஆகுது.. அவரை நான் இப்படித்தான் உருவாக்கினேன் – மோர்னே மோர்கல் பேச்சு
இந்திய பிளேயிங் XI: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.






