வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா அசத்தல் சதம்!

0
162
Bavuma

வெஸ்ட் இண்டீஸ் ஆண்கள் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் தலா 3 ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது!

இந்த சுற்றுப்பயணத்தின் முதல் தொடராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோற்கடித்தது.

- Advertisement -

டெஸ்ட் தொடரின் இறுதி மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியான இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 320 ரன்கள் குவித்தது. டீன் எல்கர் 42, எய்டன் மார்க்கம் 96, டோனி டி சோர்ஸய் 85 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப், மேயர்ஸ் தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதற்கடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 251 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜேசன் ஹோல்டர் மட்டுமே நிலைத்து நின்று 81 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் கோட்சி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்!

- Advertisement -

இதை எடுத்து 69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணிக்கு முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் ஒத்துழைப்பு தராததால் 103 ரண்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இதற்கடுத்து முல்டரை உடன் வைத்துக்கொண்டு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச்சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் நெருக்கடியான நேரத்தில் அபாரமாக விளையாடிய அவர் தனது சதத்தை நிறைவு செய்ததோடு, தொடர்ந்து விளையாடி இன்று ஆட்டத்தின் மூன்றாவது நாள் முடிவின் பொழுது, 275 பந்துகளில் 171 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார். இதில் 20 பௌண்டரிகள் அடக்கம். இவருக்கு அடுத்து அதிகப்படியாக முல்டர் 42 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் மீதி இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது தென்னாபிரிக்க அணி 356 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருக்கிறது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் கடைசி இரண்டு நாட்களில் தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கும் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டிப் பிடிப்பது என்பது கடினமே. இந்த டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி வெல்வது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது!