நாங்க கிரீஸில் நிம்மதியா இருந்தோம்.. ஆனா எந்த பிரயோஜனமும் இல்லை.. இந்தியா அசத்திட்டாங்க – ஸ்டப்ஸ் வருத்தம்

0
209
Stubbs

இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான கட்டுப்பாட்டை வெளிப்படுத்தினார்கள். இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பேசியிருக்கிறார்.

இன்று அசாம் மாநிலம் கௌகாத்தி மைதானத்தில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்திருக்கிறது. ஒரு ஓவருக்கு மூன்று ரன்கள் வீதம் எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய பவுலர்கள் சிறப்பாக இருந்தார்கள்

இந்த நாள் போட்டி குறித்து பேசி உள்ள
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கூறும்பொழுது “இந்த நாள் முடிவில் எங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருக்கிறது. இன்று ஆட்டம் இழந்த நாங்கள் ஆறு பேருமே சிறப்பாகவே ஆரம்பித்தோம். ஆனால் அதை பெரிய ஸ்கோராக எங்களால் கொண்டு செல்ல முடியவில்லை. உண்மையை சொல்வது என்றால் நான் மற்ற இடங்களில் விளையாடுவதை விட மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வதையே எப்பொழுதும் விரும்புகிறேன்”

“இந்த போட்டிக்கான ஆடுகளும் நன்றாக இருந்தது. இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களிடமிருந்து ரன்கள் எடுப்பது கடினமாக இருந்தது. நாங்கள் பேட்டிங் செய்யும் பொழுது கிரீசில் நிம்மதியாக இருந்தோம். ஆனால் ஸ்கோர் போர்டு நகரவே இல்லை. இதன் காரணமாகத்தான் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்” என்று சொல்கிறேன்.

- Advertisement -

குல்தீப்பிடம் தவறிவிட்டேன்

“பொதுவாக குல்தீப் யாதவ் அவருடைய ஓவரின் ஆரம்ப பந்தை கொஞ்சம் மெதுவாக வீசுவார். நான் அவருடன் ஐபிஎல் தொடரில் டெல்லியில் விளையாடியிருக்கிறேன். இதன் காரணமாக அவரை தான் அந்த மெதுவான பந்தில் அடித்து விளையாட முடிவு செய்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக நான் அந்தப் பந்தில் ஆட்டம் இழந்து விட்டேன்”

இதையும் படிங்க : 247 ரன்.. அட்டகாசமாக கண்ட்ரோல் செய்த இந்தியா.. தவிக்கும் தென் ஆப்பிரிக்கா.. முதல் நாள் யாருக்கு சாதகம்?

“முதல் இன்னிங்ஸ் ரன்கள் எப்பொழுதும் மிகவும் முக்கியமானது. நாளை எங்களுடைய பேட்ஸ்மேன்கள் இன்னும் கூடுதல் நேரம் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன்கள் 40 முதல் 45 ரன்கள் எடுக்க வேண்டும். அதில் ஒருவராவது சதம் அடித்தால் சிறப்பாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -