247 ரன்.. அட்டகாசமாக கண்ட்ரோல் செய்த இந்தியா.. தவிக்கும் தென் ஆப்பிரிக்கா.. முதல் நாள் யாருக்கு சாதகம்?

0
149
ICT

இன்று அசாம் மாநிலம் கௌஹாத்தி மைதானத்தில் தொடங்கிய இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், தென் ஆப்பிரிக்க அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்திருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் தேர்வு செய்தது. இந்த குறிப்பிட்ட ஆடுகளம் முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டிங் செய்த சாதகமாக இருக்கும். இந்திய அணியில் நிதீஷ்குமார் ரெட்டி சாய் சுதர்சன் இருவரும் இடம் பெற்றார்கள். கேப்டன் கில் மற்றும் அக்சர் படேல் இருவரும் விளையாடவில்லை. தென் ஆப்பிரிக்கா அணியில் கார்பின் போஸ் இடத்தில் ஸ்பின்னர் முத்துசாமி இடம்பெற்றார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா நிதானம்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்ரம் 38 ரன், ரியான் ரிகல்ட்டன் 32 ரன், ஸ்டப்ஸ் 49 ரன், கேப்டன் டெம்பா பவுமா 41 ரன், டோனி டி சோர்ஸி 28 ரன், வியான் முல்டர் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இந்த போட்டியில் முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்திருக்கிறது. களத்தில் முத்துசாமி 25 ரன், வெர்ன்னே 1 ரன் உடன் இருக்கிறார்கள். இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 3, பும்ரா, ஜடேஜா, சிராஜ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்திய அணி கட்டுப்பாடு

தற்போது இந்த போட்டி இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. காரணம் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில், தென் ஆப்பிரிக்க அணி 81.5 ஓவர் பேட்டிங் செய்திருந்தாலும், ஓவருக்கு மூன்று ரன்கள் வீதம் மட்டுமே எடுத்திருக்கிறது. இந்திய அணி மேலும் 100 ரன்கள் கொடுத்தால் கூட, ஆடுகளம் சாதகமாக இருப்பதால் நல்ல ஸ்கோர் எடுக்க முடியும்.

இதையும் படிங்க : வெறும் 28 ஓவர்.. ஹெட் ருத்ர தாண்டவத்தில் 2வது நாளில் முடிந்த டெஸ்ட்.. இங்கிலாந்து பரிதாபம்.. ஆஸி அபார வெற்றி

விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் இப்படியான ஆடுகளங்களே உருவாக்கப்பட்டது. இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸில் குறைந்தது 500 ரன்கள் எடுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். தற்போதும் இந்திய அணி இதைச் செய்ய முடியும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். எனவே இந்திய அணி இந்த போட்டியில் தற்போதைக்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -