இன்றைய டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக மாறி இருக்கிறது. இரண்டு சூப்பர் ஓவர்கள் சென்ற இந்த போட்டியில் இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தால் ஏறக்குறைய இந்த உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேற வேண்டும் என்கின்ற நிலை இருந்தது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு இன்னும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மீதம் இருப்பதால் அந்த பிரச்சனை இல்லை.
டை ஆன போட்டி
முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் 41 பந்துகளில் 59 ரன்கள், ரியான் ரிக்கல்ட்டன் 28 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குரு பாஸ் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 42 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து கடைசி ஓவருக்கு வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் நூர் அகமது 12 ரன்கள் எடுத்தார். இதனால் போட்டி டை ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றது.
வரலாற்றில் முதல் முறை
இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 17 ரன்கள் எடுத்தது. அசமத்துல்லா ஓமர்சாய் இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடித்தார். இதைத்தொடர்ந்து வந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து ஸ்டப்ஸ் மீண்டும் போட்டியை டை ஆக்கினார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் உஸ்மான் தாரிக் பந்தை எறிகிறாரா?.. உண்மையில் என்ன செய்கிறார்.. அஸ்வின் வெளியிட்ட தகவல்
இந்த முறை முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி அஸாம் அசமத்துல்லா ஓமர்சாய் ஓவரை அடித்து நொறுக்கி 23 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து வந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு முதல் இரண்டு பந்தை வீணாக்கி நபி ஆட்டம் இழந்தார். கடைசி நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் தேவைப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல் மூன்று பந்துகளில் குர்பாஸ் சிக்ஸர்கள் அடித்தார். கடைசி ஒரு பந்துக்கு ஒரு சிக்சர் தேவைப்பட்டது. இந்த நிலையில் குர்பாஸ் அந்தப் பந்தில் ஆட்டம் இழந்தார். இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. மேலும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு சூப்பர் ஓவர்கள் சென்ற முதல் போட்டியாக இது அமைந்தது.






