25 வருடம்.. 408 ரன்.. கம்பீர் பயிற்சியில் சரிந்த மணிமகுடங்கள்.. வரலாற்று தோல்வி.. தென் ஆப்பிரிக்கா சாதனை

0
167
ICT

தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று தோல்வி அடைந்திருக்கிறது. அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்கா வரலாற்று வெற்றியடைந்திருக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் எடுக்க, இந்திய அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதைத்தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா ஐந்து விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

மீண்டும் அதே சோகம்

இந்த முறையும் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியால் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளித்து விளையாட முடியவில்லை. நேற்று நான்காவது நாள் முடிவில் ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல்.ராகுல் விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி இன்று தொடர்ந்து விளையாட களம் இறங்கியது.

இந்த நிலையில் இந்திய அணி மீண்டும் கொத்துக்கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது. ஒரு முனையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சிறப்பாக விளையாடிய ஜடேஜா மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி அரைசதம் அடித்து 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி 140 ரன்கள் எடுத்து சுருண்டது. தென் ஆப்பிரிக்க அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

25 வருடம் வரலாற்றுத் தோல்வி

இந்திய அணி இறுதியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தியாவில் 25 வருடங்களுக்கு முன்பாக ஒரு டெஸ்ட் தொடரை தோற்று இருந்தது. தற்பொழுது மீண்டும் தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன் வித்தியாச தோல்வியாக இது பதிவாகி இருக்கிறது. கம்பீர் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு இந்திய டெஸ்ட் அணி பல மணி மகுடங்களை இழந்து வருகிறது.

இதையும் படிங்க :

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிக ரன் வித்தியாச தோல்வி :

408 ரன்கள் – தென் ஆப்பிரிக்கா (கௌஹாத்தி, 2025)
342 ரன்கள் – ஆஸ்திரேலியா (நாக்பூர், 2004)
341 ரன்கள் – பாகிஸ்தான் (கராச்சி, 2006)
337 ரன்கள் – ஆஸ்திரேலியா (மெல்போர்ன், 2007)
333 ரன்கள் – ஆஸ்திரேலியா (புனே, 2017)

- Advertisement -