வெறும் 30 ஓவர்.. 174 ரன் வித்தியாசம்.. ஸ்டப்ஸ் ருத்ர தாண்டவம்.. தென் ஆப்பிரிக்கா அயர்லாந்து அணி இடம் தொடரை கைப்பற்றியது

0
638
Stubbs

தற்போது அபுதாவில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவில் 174 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடின. அந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை ஜெயிக்க தொடர் சமனில் முடிந்தது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் பணியிடம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை தோற்றதால் தென் ஆப்பிரிக்கா அணி நெருக்கடியில் இருந்தது.

- Advertisement -

வெளுத்து வாங்கிய ஸ்டப்ஸ்

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரிக்கல்டன் 39 பந்தில் 40 ரன்கள், கேப்டன் டெம்பா பவுமா 39 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து வாண்டர் டுசன் 39 பந்தில் 35 ரன், வெர்னேன் 64 பந்தில் 67 ரன்கள் எடுத்தார்கள்.

இதைத் தொடர்ந்து பேட்டிங் வரிசையில் ஐந்தாவதாக வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 81 பந்துகளில் எட்டு பவுண்டரி மூன்று சிக்ஸர்களுடன் 112 ரன்கள் குவித்தார். இவருடன் இணைந்து விளையாடிய வியான் முல்டர் 34 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

30 ஓவரில் சுருண்ட அயர்லாந்து

இதைத்தொடர்ந்து மெகா இலக்கை நோக்கி விளையாடிய அனுபவம் இல்லாத அயர்லாந்து அணி 30.3 ஓவரில் 169 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பேட்டிங் வரிசையில் கடைசியில் 11 வது ஆக வந்த கிரேஜ் யங் 21 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : டி20 உலகக் கோப்பை.. 102 ரன்.. மந்தனா ஹர்மன்பிரித் ஏமாற்றம்.. நியூசியிடம் இந்திய அணி தோல்வி.. அரையிறுதிக்கு சிக்கல்

தென் ஆப்பிரிக்கா அணி முடிவில் 174 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. லிசார்ட் வில்லியம்ஸ் மூன்று விக்கெட் கைப்பற்றினார். இந்த தொடரின் முதல் போட்டியை தென் ஆப்பிரிக்க அணி வென்று இருந்த காரணத்தினால் தொடரையும் கைப்பற்றியது. மேலும் டி20 தொடரை சமனில் முடித்த அயர்லாந்து அணிக்கு பதிலடி கொடுத்திருக்கிறது.

- Advertisement -