நடப்பு டி20 உலக கோப்பையை இந்திய பயிற்சியாளர் கம்பீர் வெல்ல முடியாது என இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிஷன் தெரிவித்திருக்கிறார்.
தற்போது இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் டி20 உலக கோப்பை தொடரை விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல முதலில் அரை இறுதிக்கு தகுதி பெறுவது முக்கியமானதாக இருக்கிறது.
கம்பீரின் பெரிய பிரச்சனை
கடந்த இரண்டு ஆண்டுகளாக கம்பீர் பயிற்சியில் இந்திய டி20 அணி மிகவும் அதிரடியாக பேட்டிங் யூனிட்டில் செயல்பட்டு வந்தது. ஒவ்வொரு போட்டியிலும் பெரிய ரன்கள் குவித்து அசத்தியது. மேலும் தனிப்பட்ட வீரர்களும் அதிரடி சதங்கள் அடித்தார்கள்.
இந்த நிலையில் திடீரென டி20 உலக கோப்பை தொடரில் இந்திய பேட்டிங் யூனிட் மிகவும் சுமாராக விளையாட ஆரம்பித்திருக்கிறது. எதிரணியின் திட்டங்களை இந்திய பேட்டிங் யூனிட்டால் உடைக்க முடியவில்லை. இதனால் அரை இறுதிக்கு செல்ல முடியுமா என்கின்ற சந்தேகம் உருவாகியுள்ளது.
கம்பீர் வெல்ல முடியாது
இதுகுறித்து ஸ்டீவ் ஹார்மிஷன் கூறும் பொழுது ” கம்பீரை விரும்புவது சுலபமான விஷயம் கிடையாது, அவர் மிகவும் கடினமானவர். எனவே அவர் டிரெஸ்ஸிங் ரூமில் எப்படி இருப்பார் என்று எனக்குத் தெரியாது. இந்திய அணியின் பயிற்சியாளராக வெற்றி பெற வேண்டும் என்றால் ஈகோ குறைவாக இருக்க வேண்டும். மேலும் இந்த உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றால் அவர் பொறுப்பில் நீடிக்க முடியாது”
இதையும் படிங்க: இலங்கை அணி செயல்பாடு வேதனையா இருக்கு.. மக்கள் கோபமா இருக்காங்க.. இத மாத்தணும் – சங்கக்கரா பேச்சு
” மேலும் அவர் தனக்கு துணையாக பெரிய வீரர்களை பயிற்சியாளராக வைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர் தன்னுடன் இருப்பவர்களிடம் லாயலாக இருப்பார். ஆனால் ஒரு நல்ல பயிற்சியாளரின் அடையாளம் தவறுகளை ஒத்துக்கொண்டு சரி செய்வது ஆகும். அவர் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆனால் கம்பீருக்கு இப்படியான குணங்கள் அதிகம் கிடையாது. எனவே வெல்ல முடியாது” என்று கூறியிருக்கிறார்.






