சிராஜ் ஹெட் பிரச்னை.. நானா இருந்தா இந்திய அணிக்கு.. இனி இதைதான் செய்ய சொல்வேன் – ரவி சாஸ்திரி பேட்டி

0
227

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 14-ஆம் தேதி பிரிஸ்பானில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய வீரர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி என்றாலே அது மிகவும் ஆக்ரோஷமாகவும் பரபரப்பாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுபோலவே தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் சிராஜ் ஆகியோர்க்கிடையே ஏற்பட்ட சிறிய மோதல் சமூக வலைதளங்களில் மிக வைரலானது.

டிராவிஸ் ஹெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் சிராஜ் தனது ஆக்ரோசத்தை வெளிப்படுத்த பதிலுக்கு ஹெட் ஏதோ கூறிவிட்டு சென்றார். இது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சிராஜ் மற்றும் ஹெட் சம்பவத்தை நினைவு கூறி நான் பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய வீரர்களுக்கு எது குறித்தும் பின்வாங்க வேண்டாம் எனவும் விராட் கோலி முதல் ரிஷப் பண்ட் வரை அனைவரும் ஆக்ரோசமாக இருக்க தயாராக இருந்தனர் என சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரவி சாஸ்திரி விரிவாக கூறும்போது “சிராஜ் மற்றும் ஹெட் ஆகியோர் பிரச்சனையை சமாளிக்கும் விதத்தில் கைதேர்ந்தவர்கள் என்று நம்புகிறேன். தூசி ஏற்கனவே படிந்திருந்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் ஏற்கனவே ஒரு சிக்சர் அடித்திருப்பதால் அவரது மனநிலை என்னவாக இருக்கும் என்று அறிகிறேன். ஒரு வேகப்பந்துவீச்சாளரின் மனோபாவம் அப்படித்தான் இருக்கும் நான் விளையாடும் போது எவ்வளவு நல்லதோ அதே வேகத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதே எனது தத்துவம்.

இதையும் படிங்க:சொன்னா நம்புங்க.. பகார் ஜமானுக்கு இந்த பிரச்சனை இருக்கு.. அதான் அவர டீம்ல சேக்கல – பாக் கேப்டன் ரிஸ்வான் பேட்டி

நான் ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளராக இருந்தபோது இதை தான் கூறுவேன். ஒருபோதும் பின்வாங்க வேண்டாம் ஒரு அடி கூட பின் எடுத்து வைக்காதே, என்று கூறினேன் அதுதான் அணியின் தத்துவமாக மாறியது. மேலும் ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி மேலும் இந்திய வீரர்கள் அனைவரும் எதிரணிக்கு திருப்பிக் கொடுப்பதில் தயாராக இருந்தனர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -