மிட்சல் ஸ்டார்க் டி20 கிரிக்கெட்டில் திடீர் ஓய்வு.. பின்னணியில் ரோகித் சர்மா.. உண்மை காரணங்கள் என்ன?

0
169
Starc

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இதன் பின்னணியில் நிறைய காரணங்கள் அடங்கி இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய தொடர்களுக்கான வீரர் என மிட்சல் ஸ்டார்க் புகழ் பெற்றவர். பெரிய தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்பட கூடியவர். இந்த நிலையில் அடுத்த ஆறு மாதத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் திடீரென டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

- Advertisement -

பின்னணியில் ரோகித் சர்மா

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இரண்டாவது சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இதில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய மிட்சல் ஸ்டார்க் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட வைக்கப்படவில்லை.

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிட்சல் ஸ்டார்க் ஒரே ஓவரில் 28 ரன்கள் குவித்தார். அவரால் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் தாக்கத்தை உண்டாக்க முடியவில்லை. அவர் அட்டாக்கிங் பவுலர் என்பதால் ஸ்டெம்ப்பை நோக்கி வீசும் போது பேட்ஸ்மேன்கள் எளிதாக அடித்து விளையாடுகிறார்கள்.

- Advertisement -

இந்தியா இலங்கையும் காரணம்

இந்த நிலையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் வேகப்பந்துவீச்சிக்கு சாதகமாக இல்லாத இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியா அணியில் நிறைய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். எனவே மிட்சல் ஸ்டார்க் பங்களிப்பு ஆஸ்திரேலியா அணிக்கு தேவைபடாது.

இதையும் படிங்க : எனக்கு வாழ்க்கை கொடுத்த தமிழக வீரர்.. விராட் அந்தஸ்து தெரிஞ்சு பேசல – ஜிதேஷ் சர்மா பேச்சு

மேலும் இன்னொரு டி20 உலகக் கோப்பைக்கு காத்திருக்கும் வயதும் அவருக்கு இல்லை. எனவே இதை எல்லாம் யோசித்து நீண்ட வடிவ கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதற்காக தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -