தற்போது இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்ரிக்க அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்மித் 66 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா ஐந்து விக்கெட் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடியத்தில் ஆப்பிரிக்கா 138 ரன்னில் ஆல் அவுட் ஆனது. கேப்டன் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட் கைப்பற்றினார்.
தென் ஆப்பிரிக்கா சாம்பியன்
இதற்கு அடுத்து முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக மிட்சல் ஸ்டார்க் 58 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா அணி 207 ரன்கள் எடுத்தது. ரபாடா நான்கு விக்கெட் வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இலக்கு நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் சதம் அடித்தும், கேப்டன் டெம்பா பவுமா அரை சதம் அடித்தும் ஆட்டம் இழக்காமல் மூன்றாவது நாள் முடிவில் களத்தில் இருந்தார்கள். ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்திருக்க, கைவசம் எட்டு விக்கெட்டுகள் இருக்க வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா வரலாற்று வெற்றி
இன்று நான்காவது நாளில் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா 66 ரன், எய்டன் மார்க்ரம் 136 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த நிலையில் பெடிங்காம் ஆட்டம் இழக்காமல் 21 ரன்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் அதிரடியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையும் வென்றது.
இதையும் படிங்க : இங்கி டெஸ்ட்.. இந்த இந்திய பையன் தன்னைத்தானே ஏமாற்றி விட்டார்.. நான் வாய்ப்பு தரமாட்டேன் – பிராட் ஹாக் பேட்டி
தென் ஆப்பிரிக்க வரலாற்றில் இது முதல் உலகக் கோப்பை வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் அந்த அணி மொத்தம் 13 நாக்அவுட் போட்டிகளில் உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி தோல்வி அடைந்திருந்தது. இன்று முதல் முறையாக இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. மேலும் 1998 ஆம் ஆண்டு ஐசிசி தொடர் ஒன்றை வென்று இருந்தது. அதற்குப் பிறகு 27 ஆண்டுகள் கழித்து தற்பொழுது ஐசிசி தொடர் ஒன்றை தென் ஆப்பிரிக்கா வென்றிருக்கிறது.






