இங்கி டெஸ்ட்.. இந்த இந்திய பையன் தன்னைத்தானே ஏமாற்றி விட்டார்.. நான் வாய்ப்பு தரமாட்டேன் – பிராட் ஹாக் பேட்டி

0
234
Hogg

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களில் யாருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிராட் ஹாக் பேசியிருக்கிறார்.

தற்போது இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த மெகா டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகின்ற ஜூன் இருபதாம் தேதி துவங்க இருக்கிறது.

- Advertisement -

நான் மிகவும் வருத்தப்படுகிறேன்

இதுகுறித்து பிராட் ஹாக் பேசும் பொழுது “சர்துல் தாக்கூர் மற்றும் அவரது ரசிகர்களுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவருடைய ஆல்ரவுண்ட் செயல்திறனை நான் விரும்புகிறேன். ஆனால் அவர் தன்னுடைய உடல் தகுதியால் தன் தொழில் வாழ்க்கையில் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு விட்டார். அவர் தன்னுடைய உடல் தகுதியை சிறந்த முறையில் கவனித்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். எனவே அவரை ஆல்ரவுண்டர் வரிசையில் சேர்க்க முடியாது”

“நான் இப்பொழுது ஜடேஜா உடன் தொடர்ந்து ஒட்டிக்கொள்வேன். அவர் உங்களுக்கு பேட்டிங் ஆழத்தை அதிகரிக்க செய்கிறார். மேலும் நீங்கள் நிதீஷ்குமார் ரெட்டியையும் வைத்துக் கொள்ளும் பொழுது, உங்களுக்கு சில வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது போதுமானது. ஆனால் நீங்கள் எடுத்ததும் சர்துல் உடன் செல்ல முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவரிடம் உடல் தகுதி இல்லை”

- Advertisement -

நான் வாய்ப்பு தரமாட்டேன்

“அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் உற்சாகமாகவும், வானிலை மற்றும் ஆடுகளம் பச்சையாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருந்தால், மேலும் ஒரு போட்டியில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மேகமூட்டமாக இருக்கும் என்று தெரிந்தால், நீங்கள் சர்துலை விளையாட வைப்பது குறித்து யோசிக்கலாம்”

இதையும் படிங்க : பவுண்டரி எல்லையில் கேட்ச்.. அதிரடி புதிய விதி.. இனி எக்ஸ்ட்ரா மேஜிக் நடக்காது.. ரூல் என்ன சொல்கிறது?

“ஆனால் எந்த சூழ்நிலையிலும் நானாக இருந்தால் அவசரப்பட்டு அவரை பிளேயிங் லெவனில் முதலில் சேர்க்க மாட்டேன். மேலும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு அவருடைய உடல் தகுதி இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -