நடப்பு டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது. இந்த முடிவு பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் பொதுவாக இரவு நேரத்தில் பனிப்பொழிவு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருப்பது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி
இந்தப் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி முழுமையாக வேகப் பந்துவீச்சை நம்பியே களம் இறங்கியுள்ளது. அவர்களிடம் ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளராக கேசவ் மகாராஜ் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார். அதே சமயத்தில் பத்தாவது இடம் வரையில் அவர்களிடம் சிக்சர் அடிக்கும் வீரர்கள் இருக்கிறார்கள்.
அப்போதைய தென் ஆப்பிரிக்க அணிக்கும் இந்திய அணிக்கும் பேட்டிங் யூனிட் ஒரே அளவில் வலிமையானவை இருக்கிறது. அதே சமயத்தில் பந்துவீச்சில் மட்டும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை விட கொஞ்சம் முன்னிலையில் உள்ளது.
இந்திய அணியில் மாற்றம்
இந்த போட்டிக்கு இந்திய அணியில் அக்சர் படேல் விளையாடுவார் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கின்ற காரணத்தினால் அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு தொடரப்பட்டிருக்கிறது. கடந்த போட்டியில் களம் இறங்கிய அதே அணியை களம் இறங்குகிறது.
இதையும் படிங்க : 35/5.. இலங்கை சொந்த மண்ணில் படுதோல்வி.. தடுமாறிய இங்கிலாந்து எழுந்து மெகா வெற்றி.. ரசிகர்கள் சோகம்
இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய எதிர்பார்த்தோம். எங்களுக்கு அது கிடைக்கவில்லை. எல்லோரும் தங்களிடம் இருப்பதை வெளியில் காட்டுவதற்கு இது சிறந்த ஒரு களம். எங்களுக்கு இங்கு நல்ல ஆற்றல் இருக்கிறது. அதே சமயத்தில் என்ன கிடைத்தாலும் நாங்கள் அதை ஏற்றுக் கொள்வோம். நாங்கள் இன்று அக்சர் படேலை விளையாடவில்லை. இது மிகவும் கடினமான முடிவு” என்று கூறியிருக்கிறார்.






