தெ.ஆ டெஸ்ட் சீரிஸ் இந்திய அணி அறிவிப்பு.. 2 நட்சத்திர வீரர்கள் அதிரடி நீக்கம்.. பிசிசிஐ புதிய பாதை!

0
28974
ICT

இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இந்திய அணியின் இந்த தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் டிசம்பர் மாதத்தில் வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் நடக்க இருக்கின்றன. இந்த இரண்டு தொடர்களும் டிசம்பர் 10ஆம் தேதி ஆரம்பித்து 21ஆம் தேதி முடிவுக்கு வருகின்றன.

- Advertisement -

இந்த இரண்டு தொடர்களில் முடிவுக்கு அடுத்து இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடந்த முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா மண்ணில் இழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த சுற்றுப்பயணத்தில்தான் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

இந்த நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை இந்தியத் தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி நான்காம் தேதி துவங்கி நடைபெறுகிறது.

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த அணியில் செதேஷ்வர் புஜாராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வாய்ப்பு பெற்ற ரகானேவுக்கும் இந்த முறை வாய்ப்பு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணியில் புதிதாக பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் முகேஷ் குமாரும் இடம் பெற்று இருக்கிறார். இத்தோடு ருதுராஜுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கே.எல்.ராகுல் திரும்ப விக்கெட் கீப்பராக வந்திருக்கிறார்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி :

ரோஹித் சர்மா கேப்டன், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ருத்ராஜ், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், இஷான் கிஷான்,ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், சர்துல் தாகூர், முஹம்மத் சிராஜ், முஹம்மத் சமி, முகேஷ் குமார் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா.