தெ.ஆ டி20.. திறமை இருந்தும் வாய்ப்பு தரப்படாத 5 இந்திய அன்லக்கி வீரர்கள்!

0
2279
ICT

2024 அடுத்த வருடம் ஜூலை மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

இந்த டி20 உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு 11 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே உள்ளன. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார்களா மாட்டார்களா என்று தெரியாத நிலையில், மீதம் இருக்கும் சர்வதேச டி20 போட்டிகள் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மிகவும் முக்கியம்.

- Advertisement -

இந்த சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தங்களுக்கு தேவையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தந்து, அதிலிருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து டி20 உலகக் கோப்பைக்கு அனுப்ப வேண்டியது இருக்கிறது. இப்படியான நிலையில்தான் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் சில முக்கிய வீரர்கள் வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

சிவம் துபே :

பேட்டிங்கில் மிடில் வரிசையில் சுழற் பந்து வீச்சுக்கு எதிரான சிறந்த பவர் ஹிட்டர். மேலும் இரண்டு ஓவர்கள் வீசக்கூடிய மிதவேகப் பந்துவீச்சாளர். அயர்லாந்து, ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆஸ்திரேலியா என தொடர்ந்து மூன்று வாய்ப்புகளை பெற்ற இவர், தற்பொழுது தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் கழட்டி விடப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

அக்சர் படேல் :

இடது கை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கழட்டிவிட்டதுதான் பெரிய ஆச்சரியம். இவருடைய இடத்திற்கு ரவீந்திர ஜடேஜாவை கொண்டு வந்ததோடு இல்லாமல், அவரை துணை கேப்டனாகவும் ஆக்கி இருக்கிறார்கள். இந்த வகையில் இவருக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு என்பது கடினம்தான்.

ஆவேஷ் கான் :

பந்துவீச்சில் மிடில் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படக்கூடிய இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வந்தது. ஆஸ்திரேலியா தொடரிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திடீரென தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

சஞ்சு சாம்சன் :

ஐபிஎல் டி20 தொடரில் இவரது அதிரடியை பார்த்துதான் இந்திய டி20 அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எல்லோரும் கருதினார்கள். ஆனால் இவர் தொடர்ச்சியாக இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் புறக்கணிக்கப்படுகிறார். தற்பொழுது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்ட இவர், டி20 அணியில் சேர்க்கப்படாதது விசித்திரமாக இருக்கிறது.

உம்ரான் மாலிக் :

தற்போது இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளர் இந்த இளைஞர்தான். தொடர்ச்சியாக இவரை மூன்று வடிவத்திற்கும் கொண்டு வருவதற்கு இந்திய நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால் தற்பொழுது இந்திய கிரிக்கெட்டில் எந்த ஒரு வடிவத்திலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் இந்திய ஏ அணியிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.