ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகின்ற பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாய் இரண்டு நாடுகளில் நடைபெற இருக்கிறது. தற்போது இதற்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணி கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து இந்த முறை 2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. மீண்டும் தென் ஆப்பிரிக்க அணி தன்னுடைய சிறப்பான நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல திட்டம்
எனவே தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மனரீதியாக நல்ல நம்பிக்கையை பெற்று இருக்கிறது. எனவே இந்த முறை பாகிஸ்தானில் வைத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்வதற்கு முழு மூச்சுடன் அந்த அணி களம் இறங்கி இருக்கிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் வால்டர் தங்கள் அணி கோப்பையை வெல்லும் என்று உறுதியாக நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபிக் அறிவிக்கப்பட்டு இருக்கும் தென் ஆப்பிரிக்க அணியில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டில் மிக முக்கிய வீரரான அதிவேக பந்துவீச்சாளர் அன்றிச் நோர்க்கியா மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். இத்துடன் நல்ல வேரியேஷன் வைத்திருக்கும் லுங்கி நிகிடியும் திரும்ப வந்திருக்கிறார். மேலும் இந்த அணிக்கு கேப்டனாக டெம்பா பவுமா அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
நம்பிக்கை தரும் தென் ஆப்பிரிக்க அணி
இத்துடன் அந்த அணியில் அனுபவ வீரர்களான டேவிட் மில்லர், ஹென்றி கிளாசன், எய்டன் மார்க்ரம், ககிசோ ரபாடா, ராசி வாண்டர் டேசன், கேசவ் மகாராஜ் மற்றும் ஷம்சி ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இத்துடன் இளம் வீரர்களான வியான் முல்டர், ரிக்கி ரிக்கல்டன், டிரிஸ்ட்ன் ஸ்டப்ஸ் ஆகியோரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
இந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணி அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் என கலவையாக மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. மேலும் அவர்களிடம் பேட்டிங் யூனிட்டில் சரியான இடங்களுக்கு சரியான வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் திறமையான வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்களும் இருப்பது அந்த அணியை வலிமையானதாக மாற்றுகிறது.
இதையும் படிங்க : நீங்க நினைக்காத விஷயங்களை செய்வேன்.. கேகேஆர்ல ஆச்சரியப்பட்டு போனாங்க – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
தென் ஆப்பிரிக்க அணி : டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ராசி வாண்டர் டேசன்.






