இந்தியாவில் ODI.. தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. ஆப்கனுக்கு எதிராக புதிய திட்டம்.. பல மாற்றங்கள்

0
319
SA

தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த தொடர்களுக்கு சீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்து இளம் வீரர்களுக்கு கொண்ட அணிகளைஅறிவித்திருக்கிறது.

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தென் ஆப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக கடுமையான போட்டியளித்து இறுதியில் தோற்றது. இந்த நிலையில் அந்த நாட்டு கிரிக்கெட்டில் முன்னேற்றமான சூழல் காணப்படுவதால் தொலைநோக்கான மாற்றங்கள் செய்யப்படுகிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து தொடர்கள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் வைத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது.

தற்போது ஆப்கான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான மூன்று தொடர்களுக்கு மூன்று தென் ஆப்பிரிக்க அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு டெம்பா பவுமா கேப்டனாக தொடர்கிறார். அதே சமயத்தில் டி20 தொடருக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக தொடர்கிறார். மேலும் ரபாடா, மார்க்கோ யான்சன் மற்றும் ஹென்றி கிளாஸ் போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி :

டெம்பா பாவுமா (கேப்டன்), ஒட்னெய்ல் பார்ட்மேன், நாண்ட்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி என்கிடி, அண்டிலி பெஹ்லுக்வாயோ, நகாபயோம்ஸி பீட்டர், அண்டில் சிமெலேன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அண்டில் சிமிலேன், ஜேசன் ஸ்மித் மற்றும் லிசார்ட் வில்லியம்ஸ்.

அயர்லாந்துக்கு எதிரான தென்னாப்பிரிக்கா டி201 அணி

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஆட்னீல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நாண்ட்ரே பர்கர், ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், பேட்ரிக் க்ரூகர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, நகாபா பீட்டர், ரியான் ரிக்கல்டன், அண்டில் சிமெலேன், ஜேசன் ஸ்மித், லிசாட் வில்லியம்ஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

இதையும் படிங்க : அந்த ஒரு வார்த்தை போதும்.. தோனி என்கிட்ட இத சொன்னதே பெரிய சாதனைதான் – தேஷ் பாண்டே பேட்டி

அயர்லாந்துக்கு எதிரான தென்னாப்பிரிக்கா ஒருநாள் அணி

டெம்பா பாவுமா (கேப்டன்), ஒட்னெய்ல் பார்ட்மேன், நான்ட்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, ஜோர்ன் ஃபோர்டுயின், வியான் முல்டர், லுங்கி என்கிடி, அண்டில் பெஹ்லுக்வாயோ, நகாபா பீட்டர், ரியான் ரிக்கெல்டன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசன், கைய்ல் வெர்ரேனே மற்றும் லிசாட் வில்லியம்.

- Advertisement -