உலக கிரிக்கெட்

4 முன்னணி வீரர்கள் காயம்.. பாக் டெஸ்ட் தொடர்.. தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு.. 30 வயது வீரர் அறிமுகம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற தென்னாப்பிரிக்கா அணிக்கு மிக முக்கியமாக அமைந்திருக்கிறது.

பாகிஸ்தான் தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரை இழந்த நிலையில் அதற்கு பிறகு நடைபெற்ற ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை முதல்முறையாக தென் ஆப்பிரிக்க அணி இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வருகிற 26 ஆம் தேதி நடைபெற உள்ள பாக்சிங் டே முதல் டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் 30 வயதான ஆல் ரவுண்டர் கார்பின் போஸ் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க இன்விடேஷனல் லெவல் அணிக்காக விளையாடிய கார்பின் போஷ் பந்துவீச்சில் ஐந்து ஓவர்களில் 21 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். மேலும் 34 ஆட்டங்களில் விளையாடி 40.46 சராசரியில்1295 ரன்கள் குவித்திருக்கிறார்.

- Advertisement -

நான்கு முன்னணி வீரர்கள் காயம்

தற்போது தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜெரால்ட் கோட்ஸி (இடுப்பு), நாண்ட்ரே பர்கர் (கீழ் முதுகு அழுத்த முறிவு), லிசாட் வில்லியம்ஸ் (முழங்கால்), மற்றும் லுங்கி என்கிடி (இடுப்பு) ஆகியோர் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரபாடா மற்றும் ஜான்சன் ஆகியோரையே தென் ஆப்பிரிக்க அணி அதிகம் நம்பியுள்ளது. பவுமாவின் கேப்டன்ஷியில் ஸ்டப்ஸ், ரிக்கல்டன் மார்க்ரம் என பலமான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. எனவே பாகிஸ்தான் அணிக்கு கடுமையான சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற இந்த தொடரை வெல்ல வேண்டியது கட்டாயமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நான் இப்படி செஞ்சா.. தோனிக்கு கோவம் வரும்.. பின் பவுலிங் தர மாட்டாரு – அஸ்வின் பேட்டி

பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ள தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி :டோனி டி ஜோர்ஜி, ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, டேன் பேட்டர்சன் மற்றும் கார்பின் போஷ்.

- Advertisement -
Published by

Recent Posts