நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இந்திய அணி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஒட்டுமொத்த தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
.
இது குறித்து மிட்செல் சான்ட்னர் பேசும்போது, “[காயம் குறித்து] கை மிகவும் வலிக்கிறது, நிலைமை சரியில்லை. நாளை காலையில் எக்ஸ்எடுக்வேணபாதி கட்டத்தில் நான் மிகவும் மகிசியாக இருந்தேன். நாங்கள் நினைத்த ஆடுகளத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை. வீரர்கள் சிறப்பாகச் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொண்டனர். நடுப்பகுதியில் மைக்கேல் பிரேஸ்வெல் பந்துவீசிய விதம் அருமையாக இருந்தது. நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம். 209 ரன்கள் என்ற இலக்கு எனக்குத் திருப்திகரமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர், “இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அனைத்து சீமர்களும் அருமையாகப் பந்துவீசினர். ஸ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சாளர்களைச் சுழற்றிப் பயன்படுத்திய விதம் அருமை. சீமர்கள் சிறப்பாகப் பந்துவீசியதால் அக்சர் படேலைத் தாமதமாகப் பயன்படுத்தினர். நடுப்பகுதியிலும் அவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர். நாங்கள் இன்னும் சில பார்ட்னர்ஷிப்களை நீடித்திருந்தால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம். இருப்பினும் சில சவாலான தருணங்கள் இருந்தன. அர்ஷ்தீப் சிங் மற்றும் சிராஜை சரியான நேரத்தில் மீண்டும் களமிறக்கினார். ஒட்டுமொத்தமாக அது ஒரு சிறந்த பந்துவீச்சுத் திறமையாகும்” என்று கூறியுள்ளார்.
தங்கள் அணியின் பேட்டிங் மற்றும் தொடரின் முடிவுகள் குறித்துப் பேசிய மிட்செல் சான்ட்னர், “ஆடுகளம் இரண்டு விதமான வேகத்தைக் கொண்டிருந்ததுடன், பீல்டிங் வியூகங்கள் எங்களைக் கட்டுப்படுத்தின. இந்திய அணி பவுன்ஸை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியது. 3-1 என்ற தொடர் முடிவைப் பார்த்தால், ஸ்கோர் லைன் காட்டுவதை விட போட்டி இன்னும் நெருக்கமாகவே இருந்தது. நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடினோம். சில நேரங்களில் மழை குறுக்கிட்டதுடன், டாஸ் எங்களுக்குக் கை கொடுக்கவில்லை. இருப்பினும், பல நல்ல விஷயங்கள் நடந்தன. இன்றைய போட்டியில் இன்னிங்ஸை இன்னும் கொஞ்சம் ஆழமாக எடுத்துச் சென்றிருக்கலாம். 50 ஓவர் கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய நிறைய நேரம் உள்ளது. வெவ்வேறு வீரர்கள் அணிக்கு வந்தது நல்ல அனுபவமாக இருந்தது. பல வீரர்களும் திறமையை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று முடித்துள்ளார்.