பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது பாகிஸ்தான் அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து இரண்டு போட்டி கொண்ட முக்கியமான டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.
மீண்டும் இணையும் பெரிய தலைகள்
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தென் ஆப்பிரிக்க ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக தொடர்கிறார். மேலும் கிளாசன், டேவிட் மில்லர், மார்க்ரம், ரபாடா மார்க்கோ யான்சென், கேசவ் மகாராஜ், சம்ஸி என முக்கியமான வீரர்கள் அனைவரும் நீண்ட நாட்கள் கழித்து ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கு ஒன்றாக சேர்ந்து விளையாட இருக்கிறார்கள்.
இவர்களுடன் இளம் வீரர்களான டோனி டி சோர்சி, ரியான் ரிக்கல்ட்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஒட்டினியல் பார்ட்மேன் ஆகியோரும் அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். அடுத்த ஆண்டுபாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன் டிராபி தொடருக்காக மீண்டும் தென் ஆப்பிரிக்க முக்கிய வீரர்கள் ஒருநாள் அணியில் இணைந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஸ்டெய்னுக்கு வாய்ப்பு
மேலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அணியில் 18 வயதான இளம் இடது கை வேகப் பந்துவீச்சாளர் க்வேனா மபாகா அறிமுகம் செய்யப்பட இருக்கிறார். இவர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்க டி20 அணியில் இடம் பிடித்து விட்டார். மேலும் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் வாங்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய துல்லியமான வேகத்தின் மூலமாக எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருந்தார். இவருக்கு மிகவும் பிடித்த வீரராக ஸ்டெய்ன் இருக்கிறார். மேலும் இவர் தான் பும்ராவை விட சிறப்பானவராக வருவேன் என சவால் விட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விராட் கோலிய கிளப் பவுலர் கூட அவுட் செய்வார்.. ஹெட்டுக்கு நீங்க இதை செய்யுங்க – முகமது கைஃப் அறிவுரை
தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி : டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்னெய்ல் பார்ட்மேன், டோனி டி சோர்சி, மார்கோ யான்சென், ஹென்ரிச் கிளாசன் (வி.கீ), கேசவ் மஹாராஜ், க்வேனா மபாகா, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், சம்ஸி மற்றும் வான் டெர் டஸ்ஸன்.






