80 ஓவர்.. தென் ஆப்பிரிக்கா அணி ரன் குவிப்பு.. போட்டியை விட்டு விலகிய பாகிஸ்தான் வீரர்.. கேப்டன் பவுமா அசத்தல் சதம்.. 2வது டெஸ்ட்

0
29
South Africa vs Pakistan Cricket Team

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி t20 தொடரை இழந்த நிலையில் ஒருநாள் தொடரை மூன்றுக்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனை அடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்று தொடரை சமன் செய்யும் உத்வேகத்தில் இருக்கிறது.

- Advertisement -

ரன்குவிப்பில் தென்னாப்பிரிக்க வீரர்கள்

இந்த சூழலில் கேப் டவுனில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிராக 55 ரன்களில் ஆட்டம் இழந்தது.

இதனால் பாகிஸ்தான் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்கா வீரர்கள் இம்முறை அபாரமாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். தொடக்க வீரராக ரியான் ரெக்கல்டன் களமிறங்கினார். ஏய்டன் மார்க்கரம் 17 ரன்களில் ஆட்டமிழக்க வியான் முல்டர் ஐந்து ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஸ்டெப்ஸ் டக்அவுட் ஆக தென்னாப்பிரிக்க அணி 72 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் ரியான் ரெக்கல்டன் அபாரமாக விளையாடினார். பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு அவர் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

- Advertisement -

ரெக்கல்டன், பவுமா அபார சதம்

ரியான் ரெக்கல்டன் நான்காவது விக்கெட்டுக்கு கேப்டன் பெவுமாவுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர். கேப்டன் பவுமா 179 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்து ஆட்டமிழ்ந்தார். மறுமுனையில் ரியான் ரெக்கல்டன் தொடர்ந்து அதிரடி காட்ட தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 232 பந்துகளை எதிர்கொண்ட ரெக்கல்டன் 176 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் 21 பௌண்டரிகளும், ஒரு சிக்ஸர்களும் அடங்கும்.

நான்காவது விக்கெட்டுக்கு ரெக்கல்டன் , பவுமா ஜோடி 235 ரன்கள் சேர்த்து அசத்தி இருக்கிறது. முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் குவித்து இருக்கிறது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் சல்மான் ஆகா இரண்டு விக்கெட்டுகளையும், முஹம்மது அப்பாஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருக்கிறார்.

இதையும் படிங்க: பும்ரா இப்படி இருந்து பார்த்ததே இல்ல.. அப்ப ஏதாவது ஸ்பெஷல் நிச்சயமா இருக்கு – சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி

இதனிடையே பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சையும் அயூப் பில்டிங் செய்யும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியிலிருந்து விலகி இருக்கிறார்.தற்போது சையும் அயூப் ஸ்கேன் செய்யப்பட்டு முடிவுகள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இன்னும் 50 நாட்கள் கூட இல்லாத நிலையில் பாகிஸ்தான் அணியின் சையூம் அயூப்புக்கு காயம் ஏற்பட்டு இருப்பது ரசிகர்களிடையே சோகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அயூப் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -