இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் பும்ரா மற்றும் சாம் கான்ஸ்டாஸ் இடையேயான உரசல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் பும்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 185 ரன்கள் குவிக்க அதில் பும்ரா ஓரளவு அதிரடியாக விளையாடி 22 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடி முடித்த பிறகு ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாட ஆரம்பித்தது.
இதில் முதல் நாளின் முடிவில் விக்கெட்டுகளை இழக்க கூடாது என்பதில் கவனமாக இருந்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் பந்து வீச்சை தாமதப்படுத்த வேண்டுமென்றே நேரத்தை கடத்தியது. இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்து வீச வரும்போது தொடக்க ஆட்டக்காரர் கவாஜா வேண்டுமென்றே பேட்டிங் செய்யாமல் நேரத்தை கடத்த இதனை கவனித்த பும்ரா நடுவரிடம் முறையிட, உடனே மறுமுனையில் இருந்த சாம் கான்ஸ்டாஸ் பும்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட உடனே பும்ரா கவாஜாவின் விக்கெட் வீழ்த்தி அரிதான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.
பும்ரா நடந்து கொண்ட விதம்
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் “ஆஸ்திரேலியா அணியும் முதல் இன்னிங்ஸ் விளையாடிய போது இந்திய அணி வீரர்கள் அனைவரும் மிக உத்வேகத்துடன் இருந்தனர். ஒரு நீண்ட தொடரின் முடிவில் இது போன்ற உணர்ச்சிகளை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதில் அணியின் கேப்டன் பும்ரா தனிச்சிறப்பாக இருந்தார். ஒரு பந்துவீச்சாளராக அவரது செயல் திறன் மிகவும் உற்சாகமாய் அமைந்தது.
இதையும் படிங்க:கவஜா அவுட் ஆனதுக்கு.. அந்தப் பையன்தான் காரணம்.. சொல்லி குடுங்க இதெல்லாம் தேவையே இல்ல – டாம் மூடி பேட்டி
ஆஸ்திரேலிய வீரர் சாம் கான்ஸ்டாஸ் மீது இந்திய அணி வீரர்கள் ஏதோ ஒரு உத்வேக நோக்கத்துடனே செயல்பட்டனர். கவாஜா விக்கெட் வீழ்த்தியதும் அவரது பின்னால் இருந்த விராட் கோலி மிக ஆக்ரோஷமாக செயல்பட்டார். அதேபோல பும்ரா இதுபோல நடந்து கொள்வதை பார்ப்பது மிகவும் அரிது. அப்படி அவர் நடந்து கொண்டால் இதில் ஒரு சிறப்பம்சம் நிச்சயமாக இருக்கும் என்று நன்றாக தெரியும். எனவே அவர் ஏதாவது செய்யக் காத்திருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.