பும்ராவின் பவுலிங்கால் இந்தியா தப்பித்தது.. குல்தீப்க்கு விக்கெட் கிடைத்ததற்கு காரணமும் பும்ரா தான்.. புஜாரா பாராட்டு

0
72

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ராவை முன்னாள் வீரர் புஜாரா  பாராட்டியுள்ளார். கவுகாத்தி  மைதானத்தில் நவம்பர் 22, சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் பும்ரா 17 ஓவர்களில் வெறும் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து, முதல் நாள் முடிவில் 247-6 என்ற நிலையில் இருந்தது. இது குறித்து பேசிய புஜாரா, “ஜஸ்பிரித் தனது முதல் ஸ்பெல்லிலேயே அபாரமாக வீசினார். விக்கெட் கிடைக்கவில்லை, கேட்ச் தவறவிடப்பட்டது. ஆனால் டீ இடைவேளைக்கு முன்பு அவர் விக்கெட் எடுத்த விதம் இந்தியாவுக்கு மிகவும் அவசியமானது.”

- Advertisement -

பும்ராவின் புத்திசாலித்தனம்:

“புதிய பந்தில் ஸ்விங் கிடைக்கும். ஆனால் பழைய பந்திலும் அவர் லைன் லெந்த்தை அசைக்கவில்லை.மார்க்ரம் 4 ரன்களில்  ஸ்லிப்பில் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து தப்பினார். அப்போது அவர் அவுட்ஸ்விங்கரை எதிர்பார்த்திருப்பார். ஆனால் பும்ரா கிரீஸுக்கு அகலமாக வந்து இன்ஸ்விங்கரை வீசி உள்ளே நுழைத்து பேட்ஸ்மேனை திணறடித்தார்.”

“பும்ரா பேட்ஸ்மேன்களை மிகச் சரியாக ரீட் செய்கிறார். அகலமான கிரீஸ் அங்கிளைப் பயன்படுத்தி மார்க்ரமின் தடுப்பாட்டத்தை தகர்த்தார்.விக்கெட் மட்டுமல்ல, 17 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது போன்ற ஆடுகளத்தில் இவ்வளவு குறைவாக ரன்கள் கொடுப்பது மிகப் பெரிய வித்தியாசத்தை உருவாக்கும்.”

- Advertisement -

விக்கெட்டுகள் கிடைத்தன:

“பந்துவீச்சில் பார்ட்னர்ஷிப் பேசுவோம் அல்லவா? பும்ரா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். ஆனால் அவரது அழுத்தத்தால்தான் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டுகள் கிடைத்தன. பும்ராவுடன் பந்துவீசும்போது மற்றவர்களுக்கு விக்கெட் வாய்ப்பு அதிகரிக்கிறது. அவர் ஒவ்வொரு பந்திலும் பேட்ஸ்மேன்களை அழுத்தத்தில் வைத்திருக்கிறார்.”

இதையும் படிங்க: அடப்பாவிங்களா! ஒரு வருசமா இது தான் டா சொல்றோம்.. ஆடுகளம் குறித்து இந்திய அணி பயிற்சியாளர் பேச்சுக்கு ரசிகர்கள் கருத்து

“பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக ஆடினால்தான் அவரது ஓவரில் ஒன்றிரண்டு பவுண்டரி அடிக்க முடியும். விக்கெட் கிடைக்காவிட்டாலும் தனது ரோலை சரியாகப் புரிந்து விளையாடும் அணி வீரர் அவர்” என்று புஜாரா  புகழ்ந்தார். முதல் நாளில் சிறப்பாக வீசிய குல்தீப் யாதவ் 17 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 48 ரன்கள் விட்டு கொடுத்தார். ரவீந்திர ஜடேஜா 12 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 30 ரன்களும், முகமது சிராஜ் 17.5 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 59 ரன்களும் விட்டுகொடுத்தார்.

- Advertisement -