கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இந்தியாவுக்கு எதிராக 3 சாதனை.. 80 பந்துகளில் சதம் விளாசி தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் அபாரம்

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் 80 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் கடைசி போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரிக்கல்டன் ஆட்டத்தின் ஐந்தாவது பந்திலே விக்கெட் கீப்பர்யிடம் கேட்ச் ஆகி டக் அவுட்டானார். பவுமா உடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

80 பந்துகளில் சதம்:

ஒருபுறம் பவுமா நிதானமாக விளையாட மறுபுறம் குயிண்டன் டி காக் தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவுண்டரி, சிக்ஸர்கள் என பறக்க விட தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

எனினும் மறுமுனையில் பவுமா 48 ரன்களிலும், மேத்யூ பிரிட்ஸ்கே 24 ரன்களிலும், எய்டன் மார்க்கரம் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா கொஞ்சம் தடுமாறியது. எனினும் தனியாளாக நின்று அதிரடி காட்டிய குயிண்டன் டி காக் 80 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார்.

- Advertisement -

சாதனை விவரம்:

இதன் மூலம் மூன்று சாதனையை இன்று அவர் படைத்திருக்கிறார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் குமாரா சங்கக்காராவின் சாதனையை குயிண்டன் டிகாக்  தற்போது சமன் செய்துள்ளார்.இருவரும் தலா 23 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளனர்.

அதேபோன்று இந்தியாவிற்கு எதிராக அதிக சதம் அடித்த ஜெயசூர்யாவின் சாதனையை குண்டன் டிகாக் சமன் செய்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் ஜெயசூர்யா 85 ஐந்து இன்னிங்ஸில் 7 சதம் அடித்துள்ள நிலையில், குயிண்டன் டீ காக் வெறும் 23 இன்னிங்ஸில் ஏழு சதத்தை அடித்து இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க: நாம் பாத்ரூம்ல அழுதேன்.. 70 ரன் எடுக்க முடியாத கொடுமை நடந்தது.. ஆனா இந்திய அணிக்கு வருவேன் – ரியான் பராக் பேச்சு

அது மட்டும் இல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆசிய மைதானங்களில் அதிக சதம் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற டிவில்லியர்ஸ் சாதனையும் குயிண்டன் டி காக் சமன் செய்துள்ளார். டிவில்லியர்ஸ் 10 சதம் அடித்துள்ள நிலையில் குயிண்டன் டி காக்  10 சதம் அடித்திருக்கின்றார்.

- Advertisement -
Published by

Recent Posts