இந்திய கிரிக்கெட்

மேட்ச்ச யாரைக் கேட்டு முன்னாடி முடிச்சீங்க.. கேப்டனா கில் இப்படி பண்ணி இருக்கவே கூடாது – ஸ்ரீகாந்த் கோபம்

​நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில், கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியின் கடைசி நேர முடிவு குறித்து முன்னாள் இந்திய கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த் விமர்சித்துப் பேசியுள்ளார்.

- Advertisement -

​வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் இன்னிங்ஸில் இந்தியா முன்னிலை பெற்றிருந்தாலும், ஐந்தாவது நாளின் இறுதி ஒரு மணி நேர ஆட்டம் எஞ்சியிருக்கும்போதே இரு அணி கேப்டன்களும் கைகுலுக்கிப் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டனர். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்ட சூழலில், இந்த முடிவு குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.

​இந்திய அணியின் இந்த செயல்பாடு குறித்து கிரிஸ் ஸ்ரீகாந்த் பேசும்போது “ஒரு மணி நேரம் மீதமிருக்கும்போது ஏன் அவர்கள் கைகுலுக்கினார்கள்? ஒரு மணி நேரத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியாதா? நான் இருந்திருந்தால் வெற்றிக்குத்தான் முயற்சித்திருப்பேன். உங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் சோர்வாக இருக்கலாம், ஆனால் நீங்கள் வெற்றிக்கு அருகில் இருக்கிறீர்கள். இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தால் நியூசிலாந்தின் டெயில் எண்டர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய வந்திருப்பார்கள். எனவே அவர்கள் ஏன் கைகுலுக்கி டிராவை ஏற்றுக்கொண்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் இதுகுறித்து கிரிஸ் ஸ்ரீகாந்த் பேசும்போது “இந்தியாவின் ஃபீல்டிங் மற்றும் வியூகங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஐந்தாவது நாளில் கூட ஏன் ஸ்லிப் இல்லாமல் பந்து வீசினார்கள்? பும்ரா பந்து வீசும்போது கூட ஸ்லிப் இல்லாமல் கல்லி மட்டுமே வைத்திருந்தார்கள். இன்று நியூசிலாந்து ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையிலும் சில நேரங்களில் ஸ்லிப் இல்லாமல் இருந்தது. பும்ரா பந்து வீசும்போது எப்படி ஸ்லிப் இல்லாமல் இருக்க முடியும் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by