கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்.. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 282 ரன்கள் இலக்கு.. ஆஸி வெற்றி பிரகாசம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டதை தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்ற 282 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்திருக்கிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இதை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ரபாடாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் ஆகியோர் அபாரமாக விளையாடி அரை சதம் அடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 212 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து தென்னாப்பிரிக்க அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் விளையாடியது. இதில் ஏய்டன் மார்க்கரம், வியான் முல்டர் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்  ஆகியோர் சொற்ப ரன்களில்  ஆட்டமிழக்க, டேவிட் பெட்டிங்காம் மட்டும் 45 ரன்கள் எடுத்தார்.

சரிந்த விக்கெட்டுகள்:

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 138 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து 74 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் தடுமாறியது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா கேமரன் கிரீன், ஸ்மித் ஆகியோர் ஆட்டமிழக்க, ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 73 ரன்கள் இழந்து தடுமாறியது.

- Advertisement -

இதனால் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் குஷியில் இருந்தனர். அப்போதுதான் ஒரு டிவிஸ்ட் நடந்தது. களத்திற்கு வந்த ஆஸ்திரேலிய கீழ் வரிசை வீரர்கள் எப்போதும் போல் அந்த அணியை காப்பாற்றி விட்டனர். குறிப்பாக மிட்செல் ஸ்டார்க் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 130 பந்துக்களை எதிர் கொண்டு 58 ரன்கள் சேர்த்தார்.

ஆஸ்திரேலியா அபாரம்:

அலெக்ஸ் கெரி 43 ரன்களும், ஹேசல்வுட் 17 ரன்களும் எடுத்தனர். இதனால் 73 ரன்களில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 207 ரன்கள் எடுத்து சரிவிலிருந்து மீண்டது.இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க வீரர்கள் ரபாடா நான்கு விக்கெட்டுகளையும், லுங்கி நிகிடி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர். இதனால் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி தங்களுடைய கடைசி இன்னிங்ஸில் களம் இறங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு அவசரமாக திரும்பும் கம்பீர்.. மருத்துவமனையில் தாயார் அனுமதி.. சோகத்தில் வீரர்கள்

இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து முறை 250க்கு மேல் உள்ள இலக்குகளை தென்னாப்பிரிக்கா சேஸ் செய்திருக்கிறது. ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை வெறும் இரண்டு முறை மட்டும் தான் 250 ரன்கள் மேல் உள்ள இலக்குகள் வெற்றிகரமாக எட்டப்பட்டு இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts