இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் தாயார் சீமா, மாரடைப்பு ஏற்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இந்த நெருக்கடியான நேரத்தில் தனது குடும்பத்துடன் இருப்பதற்காக கம்பீர் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கென்ட்டில் உள்ள பெக்கன்ஹாமில் வியாழக்கிழமை நடந்த பயிற்சி முகாமில் கம்பீர் இந்திய அணியுடன் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. ஜூன் 11 அன்று ஏற்பட்ட குடும்ப பிரச்சனையை கவனிக்க, டெல்லியைச் சேர்ந்த கம்பீர் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
கம்பீர் எப்போது திரும்புவார்:
இதனையடுத்து வரும் ஜூன் 17, செவ்வாய்க்கிழமை, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு இந்திய அணியுடன் மீண்டும் கம்பீர் இணையவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இதன் காரணமாக கம்பீர், இன்று இந்திய அணி பங்கேற்கும் Intra squad பயிற்சி ஆட்டத்தை காண இயலாது. இருப்பினும், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னி மோர்கல் மற்றும் உதவி பயிற்சியாளர் ரயான் டென் டோச்சேட் ஆகியோர் இந்த நான்கு நாள் போட்டியில் வீரர்களின் செயல்பாட்டைக் கவனித்து, கம்பீர் இங்கிலாந்து திரும்பியவுடன் அவருக்கு தகவல் வழங்குவார்கள்.
இந்த பயிற்சி ஆட்டத்தை காண யாருக்கும் அனுமதி தரப்படாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனவே, ஜூன் 13 முதல் ஜூன் 16 வரை நடைபெறும் இந்த அதிகாரப்பூர்வமற்ற பயிற்சி ஆட்டத்திற்கு ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்பு அனுமதிக்கப்படவில்லை.
பயிற்சி ஆட்டம் எப்படி நடக்கும்?
இந்த பயிற்சி ஆட்டத்தில், பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழந்தால், அவர்களுக்கு மேலும் பயிற்சி தேவை என்று அணி நிர்வாகம் கருதினால், அவர்கள் மீண்டும் பேட் செய்ய அழைக்கப்படலாம். இந்த ஆட்டம் முக்கியமாக வீரர்களுக்கு போட்டி சூழலை உருவாக்கி, டெஸ்ட் கிரிக்கெட் சூழலுக்கு பழக்கப்படுத்த உதவும்.
இதையும் படிங்க: கில் சிறந்த கேப்டனா வரணும்னா.. இந்த சிக்கலை இந்திய அணி அவருக்கு தரவே கூடாது – ஹர்பஜன் சிங் கருத்து
இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக் கேப்டன், விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, த்ருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.






