WTC பைனல்.. ஆஸியை விட எங்களுக்கு அட்வான்டேஜ் இல்ல.. இதுதான் காரணம் – ஜான்டி ரோட்ஸ் பேச்சு

0
311
Rhodes

நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை விட தென் ஆப்பிரிக்க அணிக்கு எந்தவித அட்வான்டேஜும் இல்லை என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் கூறியிருக்கிறார்.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்க அணி தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது அணியாக ஆஸ்திரேலிய சொந்த மண்ணில் இந்திய அணியை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றுக்கு ஒன்று என வீழ்த்தி தகுதி பெற்றது.

- Advertisement -

முதல் முறையாக நடந்த சம்பவம்

ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி நடப்புச் சாம்பியனாக இருந்து வருகிறது. அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணி முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க அணியில் நட்சத்திர வீரர்கள் ஒரே நேரத்தில் பலர் ஓய்வு பெற்றதால் அந்த அணி சிறிது சரிவுக்கு உள்ளானது. தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வந்து கொண்டிருக்கிறது. இதன் அறிகுறியாக அடுத்தடுத்து இரண்டு ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிக்கு அந்த அணி தகுதி பெற்று இருக்கிறது.

- Advertisement -

எங்களுக்கு அட்வான்டேஜ் இல்லை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து பேசி இருக்கும் ஜான்டி ரோட்ஸ் கூறும்பொழுது “நடைபெற இருக்கும் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எங்களிடம் இருக்கும் சிறந்த வேகப் பந்துவீச்சு தாக்குதலால் எங்களுக்கு பெரிய அட்வான்டேஜ் இல்லை என்று நான் சொல்லுவேன். காரணம் என்னவென்றால் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சை நல்ல முறையில் விளையாடுவார்கள். அதே சமயத்தில் அவர்களிடமும் சிறந்த வேகப் பந்துவீச்சு தாக்குதல் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ள இருக்கும் இறுதிப்போட்டி சிறப்பானதாக இருக்கும்”

இதையும் படிங்க : டிராவிட் இடத்த நிரப்புவது கம்பீருக்கு ரொம்ப கஷ்டம்.. அவருக்கு இத்தனை சவால் இருக்கு – தினேஷ் கார்த்திக் பேச்சு

“வெற்றிதான் வெற்றியை வளர்க்கிறது. நீண்ட காலமாக தென் ஆப்பிரிக்கா ஐசிசி தரவரிசை பட்டியல் மத்தியில் இருந்தது. தற்போது தென் ஆப்பிரிக்க ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர்கள் பெரிய முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக எங்களுக்கு ஒரு புதிய உற்சாகம் கிடைத்திருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -