இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடத்தை நிரப்புவது தற்போதைய தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு எளிதானதாக இருக்காது என இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.
கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய அணி பல வரலாற்றுத் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கு நடுவில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை உள்நாட்டில் வென்றது மட்டுமே சிறப்பானதாக இருக்கிறது. மற்றபடி இலங்கை நியூசிலாந்து ஆஸ்திரேலியா என வரலாற்றுத் தோல்விகளை சந்தித்து வருகிறது.
பயிற்சியாளராக கம்பீருக்கு இருக்கும் பிரச்சனைகள்
கம்பீர் இப்பொழுது மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மூன்று கேப்டன்கள் உடன் விளையாடக்கூடிய இடத்தில் இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்ததும் ரோஹித் சர்மா மொத்தமாக ஓய்வு பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்பொழுது அவர் மூன்று கேப்டன்கள் கீழ் வேலை செய்ய வேண்டிய நிலைமை வரும்.
மேலும் ஒரு பயிற்சியாளராக வீரர்களுக்கு அணியில் இடத்தை பாதுகாப்பாக வைப்பதும், அவர்களை நம்பிக்கை உடன் இருக்கச் செய்வதும் மிகவும் முக்கியம். இதற்கு அடுத்த சில ஆண்டுகளில் எந்தெந்த வீரர்களுடன் செல்ல போகிறோம் என்கின்ற தெளிவு வேண்டும். ஆனால் தற்போது இந்திய கிரிக்கெட்டில் இந்த அணியில் எந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் விளையாடுவார்கள்? என்பது உறுதியில்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினேஷ் கார்த்திக் தெரிவித்த கருத்து
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் கம்பீருக்கு சிறப்பாக வந்தது. ஆனால் அதற்குப் பிறகு அதற்கு விஷயங்கள் சரியாக நடைபெறவில்லை. ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்ற வெற்றிகரமான பயிற்சியாளராக இருக்கிறார். இதன் காரணமாக அவருடைய இடத்தை கம்பீர் நிரப்புவது பெரிய கடினமான விஷயமாக மாறி இருக்கிறது”
இதையும் படிங்க : இன்னும் 5 விக்கெட்.. ஷமி படைக்க காத்திருக்கும் இமாலய சாதனை.. 101 போட்டியில் நடக்குமா? – சுவாரசிய தகவல்கள்
“ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவது குறித்து அவர்களே முடிவெடுக்க வேண்டும் என்று கம்பீர் விரும்புகிறார். தற்பொழுது கம்பீர் ஒரு நல்ல டிரெஸ்ஸிங் ரூமை உருவாக்க வேண்டும். வீரர்களின் இடத்திற்கு அவர்களுக்கு நல்ல பாதுகாப்பை கொடுக்க வேண்டும். மேலும் அவர் எந்த வீரர்களுடன் செல்ல விரும்புகிறார்? தற்போது இருக்கும் வீரர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாரா? வீரர்கள் அவருடன் இணக்கமாக இருக்கிறார்களா? என்பதெல்லாம் கேள்வியாக இருக்கிறது. அப்பொழுது அவருக்கு மலையளவு அழுத்தம் உருவாகி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.