இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 516 ரன்கள் என்கின்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயத்தை தருகிறது.
தென் ஆப்பிரிக்கா அணி உள்நாட்டில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளை வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா தாக்குப் பிடித்து விளையாடி 70 ரன்கள் எடுக்க, அந்த அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணி எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. அந்த அணி மொத்தம் 13 ஓவர்கள் மட்டுமே விளையாடி 42 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு மிகக்குறைந்த ரன்னாக இது பதிவாகியது. தென் ஆப்பிரிக்க அணியின் மார்க்கோ யான்சென் ஏழு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்ரம் 47 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் டெம்பா பவுமா மற்றும் ஸ்டப்ஸ் ஜோடி 433 பந்துகளில் 249 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இதையும் படிங்க : ஆஸி வந்ததுமே எனக்கு பெரிய ஏமாற்றமா போயிடுச்சு.. இப்ப ஒரு நல்ல விஷயம் இது நடந்திருக்கு – சுப்மன் கில் பேட்டி
சிறப்பாக விளையாடிய ஸ்டப்ஸ் 222 பந்தில் 122 ரன்கள் கேப்டன் டெம்பா பவுமா 228 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் எடுத்தது. இலங்கை அணிக்கு 516 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாவது நாளில் மூன்று விக்கெட்டை இழந்து 85 ரன்கள் எடுத்து இலங்கை அணி விளையாடிக் கொண்டிருக்கிறது.