முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தனது காயம் குறித்தும் இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி குறித்தும் பேசியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய தொடரில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கில் கட்டை விரலில் காயம் அடைந்து முதல் டெஸ்டில் விளையாட முடியாமல் போனது எல்லோருக்கும் பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது. ஆனால் இந்திய அணி அந்த டெஸ்டில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
கடந்த முறையில் தவறவிட்ட கில்
கடந்த முறை கில் ஆஸ்திரேலியா தொடரில் இளம் வீரராக இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். ஆனாலும் அவருக்கு சிறப்பு வாய்ந்த பெர்த் மைதானத்தில் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறையும் பயிற்சியில் காயம் அடைந்து இந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு அமையவில்லை.
இந்த நிலையில் தற்போது அவரது காயம் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் இருப்பதாகவும், பயிற்சியாளரும் தானும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே இரண்டாவது டெஸ்டில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சூசகமாக கில் தெரிவித்திருக்கிறார்.
இங்கு ஆரம்பமே ஏமாற்றம்
இதுகுறித்து கில் கூறும் பொழுது “காயத்திற்கு பிறகு பயிற்சியில் எனக்கு இன்று முதல் நாள். நான் நேர்மையாக பயிற்சியின்போது காயம் எப்படியான வலியை கொடுக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்ற உணர்வில் இருந்தேன். ஆனால் நானும் பிசியோ கமலேஷும் எதிர்பார்த்ததை விட எனக்கு காயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”
இதையும் படிங்க : பும்ராவ ஆடுறத விட மோசமானது எதுவும் இல்ல.. இதனால தான் அவர் கஷ்டமானவர் – ஸ்மித் ஓபன் பேட்டி
“எனது காயம் குறித்த உண்மை நிலையை நான் அறிந்த பொழுது எனக்கு ஆரம்பத்தில் மிகவும் ஏமாற்றமாக இங்கு அமைந்தது. நான் கடைசியாக இங்கு வந்த பொழுது விளையாடாத ஒரே மைதானமாக பெர்த் இருந்தது. எனவே அந்த மைதானத்தில் விளையாட காத்துக் கொண்டிருந்தேன். அது ஒரு ஐகானிக் மைதானம். ஆனால் விளையாட முடியாவிட்டாலும் இந்திய அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






