இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டீ பிரேக்கின் போது 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்திருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணி எடுத்த ஒரு தவறான முடிவே இந்த சரிவுக்கு காரணம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
தற்போது இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்ரம் 31, ரியான் ரிக்கல்டன் 23, வியான் முல்டர் 24, கேப்டன் டெம்பா பவுமா 3, டோனி டி சோர்ஸி 24, விக்கெட் கீப்பர் வெர்ரின்னே 16, மார்க்கோ யான்சன் 0, கார்பின் போஸ் 3 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
தென் ஆப்பிரிக்க அணியில் நிறைய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. ஆனால் அவற்றை பயன்படுத்திக் கொள்ள அவர்கள் தவறி விட்டார்கள். இதன் காரணமாக தேநீர் இடைவேளையின் போது 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் அந்த அணி எடுத்திருக்கிறது. பும்ரா 3, குல்தீப் மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.
தற்போது போட்டி நடைபெற்று வரும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் நாளின் ஆரம்பத்தில் பந்துவீச்சிக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரண்டாவதாக பேட்டிங் செய்தால் இரண்டாவது இன்னிங்ஸை நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதால் தென் ஆப்பிரிக்கா பயந்து இந்த முடிவை எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : என்னை இந்திய அணியில் இருந்து வெளியே அனுப்புங்க.. குல்தீப் யாதவ் திடீர் கோரிக்கை – என்ன நடந்தது?
தற்போது உலக சாம்பியனாக இருக்கும் தென் ஆப்பிரிக்கா இந்த போட்டிக்கு முன்பாக தாங்கள் மிகவும் தைரியமாக இருப்பதாகவும், இந்திய அணியை தங்களால் வீழ்த்த முடியும் என நிறைய பேசினார்கள். ஆனால் கடைசியில் வழக்கம்போல் பயந்து கொண்டு இறுதி நாட்களில் பேட்டிங் செய்யக்கூடாது என முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து சரிவை சந்தித்திருக்கிறார்கள். இதுகுறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.