என்னை இந்திய அணியில் இருந்து வெளியே அனுப்புங்க.. குல்தீப் யாதவ் திடீர் கோரிக்கை – என்ன நடந்தது?

0
297
Kuldeep

இந்திய அணியில் இருந்து தன்னை விடுவிக்க குல்தீப் யாதவ் பிசிசிஐக்கு கோரிக்கை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்திய அணிக்கு தொடர்ச்சியாக போட்டிகள் இருக்கும் நிலையில் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி துவங்கி இருக்கிறது. இந்த போட்டியில் குல்தீப் யாதவுக்கு இடம் கிடைத்து தற்பொழுது அவர் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

தொடர்ச்சியான போட்டிகள்

இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. இதைத்தொடர்ந்து டி20 உலக கோப்பை என முக்கியமான போட்டிகள் அடுத்தடுத்து வர இருக்கின்றன.

டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால் இந்திய ஸ்பின்னர் அனைவரும் அதற்கு முன்பாக தயாராக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. குறிப்பாக குல்தீப் யாதவ் எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. இப்படியான நிலையில் அவர் ஓய்வு கேட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

விடுவிக்க கேட்டது ஏன்?

குல்தீப் யாதவ் இந்த மாதம் நவம்பர் இறுதியில் தன்னுடைய திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியை முடித்துவிட்டு, ஒருநாள் தொடரை நவம்பர் 30ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இதையும் படிங்க : கம்பீர் அடுத்த டிராவிட் புஜாரா வேணாமா? சாய் சுதர்சனை வச்சி மியூசிக் சேர் ஆடாதீங்க.. அவர் யூஸ் இல்லையா? – ஆகாஷ் சோப்ரா கேள்வி

இந்த நிலையில் குல்தீப் யாதவ் ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு கேட்டு இருப்பதாக தெரிகிறது. அதே சமயத்தில் இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் இந்திய அணிக்கு தேவைப்பட்டால் நிச்சயம் அவர் திருமணத்தை தள்ளி வைக்க வேண்டி வரும் என்றும் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -