இந்திய கிரிக்கெட்

கவாஜா சொல்லும்படி குற்றத்தை நாங்கள் மட்டுமே செய்யவில்லை.. விரிவான விசாரணையை மீண்டும் நடத்த வேண்டும் – டேவிட் வார்னர் வேண்டுகோள்

​ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது சுயசரிதை நூலான ‘சப்ர்’ (Sabr) புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து எழுப்பியிருக்கும் கருத்துகள் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது நிகழ்ந்த பந்தசேத விவகாரம் குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

- Advertisement -

​2018-ஆம் ஆண்டு கேப்டவுன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தசேதத்தில் ஈடுபட்டதாக ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகிய மூன்று வீரர்களுக்கு மட்டுமே கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், அந்தச் செயலில் அணியில் உள்ள அனைவருக்கும் தொடர்பு இருந்தது என்றும், ஒட்டுமொத்த அணியும் அதற்கான கூட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உஸ்மான் கவாஜா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மேற்கொண்ட விசாரணை முறைகள் அவசரகதியானவை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

​உஸ்மான் கவாஜாவின் இந்த அதிரடி வெளிப்பாடுகளுக்கு முன்னாள் துணைக்கீப்டன் டேவிட் வார்னர் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து டேவிட் வார்னர் பேசும்போது “எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து நான் வெளிப்படையாகப் பேசுகிறேன். உஸ்மான் கவாஜா தனது புத்தகத்தில் கூறியுள்ள அனைத்து உண்மைகளும் நூறு சதவீதம் சரியானவை. உண்மை தற்போது முழுமையாக வெளிவந்துவிட்டது, மக்கள் அன்று என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினர், அதை அவர் இப்போது எந்தவித மறைவுமின்றி தெளிவாகச் சொல்லிவிட்டார்” என்று கூறி இருக்கிறார்.

​இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் எவ்வித புதிய விசாரணையும் நடத்தப்படாது என்று திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. அணியின் தற்போதைய கேப்டன் பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட சில வீரர்களும், கிரிக்கெட் சங்கங்களும் இந்த பழைய சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், தற்பொழுது இந்த விவாதங்களை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -
Published by