நேற்று நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியிடம் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இது குறித்து தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தத்தில் ஆப்பிரிக்க அணி தட்டு தடுமாறி 169 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் 33 பந்தில் அதிரடி சதம் அடித்தார். இதனால் 13 ஓவர்களில் நியூசிலாந்து அணி இலக்க எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சோக் ஆகவில்லை
இது குறித்து பெண் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் பேசும் பொழுது ” நாங்கள் நேற்றைய போட்டியில் சோக் ஆகவில்லை. நாங்கள் சோக் ஆனோம் என்று சொன்னார் போட்டியில் வெல்வதற்கு எங்களுக்கு சிறு வாய்ப்பாவது தெரிந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் நியூசிலாந்து அணியால் கடுமையான முறையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்”
“எங்களுக்கு அந்த சிறு வாய்ப்பு இருந்திருந்தால் ஏதாவது சொல்லலாம். இப்படி எதுவுமே எங்களுக்கு நியூசிலாந்து கொடுக்கவில்லை. இது எங்கள் ஊர் மொழியில் சொல்வதாக இருந்தால் நாங்கள் முழுமையாக நியூசிலாந்து அணியால் கடுமையான முறையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்”
காரணம் சொல்ல விரும்பவில்லை
“நியூசிலாந்து எங்களை இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி விட்டார்கள். அதனால் போட்டியில் எங்களுக்கு எந்த இடத்திலும் எந்த வேகமும் கிடைக்கவில்லை. நாங்கள் ஆரம்பத்திலேயே நிறைய விக்கெட் இழந்து மாட்டிக்கொண்டோம். இதற்கான முழு பெருமை நியூசிலாந்து அணிக்கு சேரும்”
இதையும் படிங்க : நான் முன்னாடி சொன்னது யாருமே கேட்கல.. அதனாலதான் வருண் சக்கரவர்த்தி இப்போ வசமா மாட்டிக்கிட்டாரு – ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி
“நாங்கள் நேற்று இரவு தோல்வியடைந்ததற்கு இங்கு உட்காரத்து நான் எந்த காரணத்தையும் சொல்ல விரும்பவில்லை. நியூசிலாந்து வெற்றிக்கு அவர்கள் சிறப்பாக செயல்பட்டதுதான் காரணம். அவர்கள் பந்து வீச்சு பேட்டிங் என எங்களை முழுமையாக தோற்கடித்து விட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.






