நான் முன்னாடி சொன்னது யாருமே கேட்கல.. அதனாலதான் வருண் சக்கரவர்த்தி இப்போ வசமா மாட்டிக்கிட்டாரு – ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி

0
184

டி20 உலக கோப்பை அரை இறுதியில் ஆட்டத்தில் இன்று நடைபெற உள்ள இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் எதிர்கொள்ள உள்ளன.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த போட்டி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்று நடைபெற்ற முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்ந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. எனவே இன்று நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே தோல்வியைத் தழுவி மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கம்பீரமாக அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த சில போட்டிகளாக பந்து வீச்சில் தடுமாறி வரும் வருண் சக்கரவர்த்தி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இருதரப்பு போட்டிகளில் வருணை அதிகமாக வெளிப்படுத்தக் கூடாது என்று கூறி இருந்தேன். இப்போது பல அணிகள் அவரை தேர்வு செய்கின்றன என்று நினைக்கிறேன். மக்கள் யாரையாவது தேர்வு செய்ய தொடங்குவது காலத்தின் கட்டாயம். உலகில் எந்த ஒரு பேட்டரும் தன் வாழ்நாளில் தேர்வு செய்ய முடியாத பந்து வீச்சாளர் இருக்க முடியாது. ஆனால் இங்கு நாம் அவரை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் அவர் அதிகமாக விளையாடாத காரணத்தால் அவர் சற்று நிம்மதியாக இருக்கலாம்.

வருண் நல்ல தொடக்கம் கொடுத்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அவரை அட்டாக் செய்து விளையாடுகிறார்கள் என்று நினைத்தால் கொஞ்சம் தற்காப்புடன் இருந்து ஓவர்களை விட்டுக் கொடுக்க வேண்டியது அவருடைய வேலையாகும். எனவே அவர் ஷட் டவுன் பந்துகளை வீச வேண்டும். ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அவர் விளையாட வேண்டும். இதுதான் நல்லதுக்கு சிறந்ததுக்கும் உள்ள வித்தியாசம் இதனை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -