இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவதற்கு குறிப்பிட்ட சிறப்பு திட்டத்தை தென் ஆப்பிரிக்க அணி கொண்டு வர இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் கூறியிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவின் முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இன்னொரு அணியாக ஆஸ்திரேலிய தகுதி பெற்று இருக்கிறது. இந்த இரு அணிகளும் மோதிக் கொள்ளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் 11ஆம் தேதி நடக்க இருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் மறு எழுச்சி
உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கிரிக்கெட் அணியாக இருந்து வந்த தென் ஆப்பிரிக்கா அணி முன்னணி வீரர்கள் கொத்தாக வெளியேறியதால் பின்னடைவை சந்தித்தது. அதிலிருந்து தற்பொழுது மீண்டு படிப்படியாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதில் வெல்லக்கூடிய இடத்தில் இருந்து இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் தென் ஆப்ரிக்க அணி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணி உலக கிரிக்கெட்டில் தன்னுடைய பழைய இடத்தை நோக்கி சிறப்பாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தினால் அது அவர்களுக்கு மிகச் சிறப்பானதாக அமையும். முதல் ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிறப்பு திட்டம்
இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கான்ட்ராக்ட் கூறும் பொழுது “நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்தில் வைத்து அயர்லாந்து அல்லது ஆப்கானிஸ்தான் அணிகள் ஓய்வாக இருந்தால் அவர்களுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட முயற்சி செய்வோம். ஒருவேளை இந்த திட்டம் தோல்வி அடைந்தால், நாங்கள் முன்கூட்டியே அங்கு சென்று எங்களது பயிற்சிகளை ஆரம்பித்து விடுவோம்”
இதையும் படிங்க : ஜெய் ஷா எங்க வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்ட அழிச்சிடாதிங்க.. WTC முறைய மாத்தாதிங்க – கிளைவ் லாயிட் கருத்து
“எங்கள் டெஸ்ட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்த கோடைகாலத்தில் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடியிருக்கிறார். இதற்கு அவருக்கு முழுதாக கிரெடிட் கொடுக்க வேண்டும். எந்த ஒரு கேப்டனும் தான் சிறப்பாக செயல்பட்டு அணியை முன்னின்று வழிநடத்த விரும்புகிறார்கள். அதைத்தான் அவர் செய்திருக்கிறார். இதுவே அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த பார்ம் நிலையாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






