உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு டெஸ்ட் கிரிக்கெட் நாடுகளை இரண்டாகப் பிரிப்பது சரியானது இல்லை என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் கூறியிருக்கிறார்.
தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டிகளை அதிகரிப்பதற்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு டெஸ்ட் அணிகளை குறைத்து இரண்டு பிரிவாக பிரிப்பதற்கும் பேச்சு வார்த்தைகள் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி புதிய யோசனை
தற்போதைய ஐசிசி தலைவர் ஜெய் ஷா-வை இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்களின் நிர்வாகிகள் தங்களுக்குள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை அதிகரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்த இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
மேலும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் என ஏழு அணிகளை ஒரு பிரிவாக வைத்து, இதிலிருந்து இறுதிப் போட்டிக்கு இரண்டு அணிகளை தேர்ந்தெடுக்கவும், மீதி டெஸ்ட் அணிகளை அவர்களுக்குள் சாதாரண முறையில் விளையாட வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஏழு அணிகள் கொண்ட குழுவில் கடைசி இடத்தை பிடிக்கும் அணி, இரண்டாவது குழுவுக்கு சென்று விடும் எனவும், இரண்டாவது குழுவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி ஏழு அணிகள் கொண்ட முதல் குழுவுக்கு வந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
கிளைவ் லாயிட் வருத்தம்
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் லெஜென்ட் கேப்டன் கிளைவ் கூறும்பொழுது “டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை பெறுவதற்கு கடுமையாக உழைத்த அனைத்து கிரிக்கெட் நாடுகளுக்கும் இது பெரிய பின்னடைவாக அமையும். இனி அவர்கள் தங்களுக்குள்ளேயே விளையாடிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு தனித்த வரலாறு இருக்கிறது. ஆனால் இப்பொழுது எங்களை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியாது என்று கூறப் போகிறீர்கள்”
இதையும் படிங்க : எங்க அகிப் ஜாவேத் தத்துவத்தை ஏத்துக்கோங்க கம்பீர்.. அவர் செஞ்சதை செய்யுங்க – பாக் பசித் அலி வேண்டுகோள்
“இவர்களின் பேச்சுவார்த்தை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை கலைப்பதாகவே நம் கற்பனை செய்து கொள்ளலாம். இவர்கள் செல்ல வேண்டிய வழி இது கிடையாது. ஐசிசி அனைவருக்கும் சமமான முறையில் பணத்தைப் பிரித்துக் கொடுப்பதே சரியானது. அதன் மூலம் ஒவ்வொரு கிரிக்கெட் நானும் தங்களது கிரிக்கெட்டை மேம்படுத்திக் கொள்ள முடியும். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணைகள் சரியாக அமைக்கப்பட வேண்டும். மக்கள் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க விரும்புகிறார்கள். பணம் இருந்தால் சிறந்த முறையில் திரும்பி வர எங்களிடம் அமைப்பு இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






