400 ரன்.. லாராவின் சாதனையை இதனால்தான் நான் உடைக்கல.. தென் ஆப்பிரிக்க கேப்டனின் பெருந்தன்மையை பாராட்டும் ரசிகர்கள்

0
719

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் வியான் முல்டர் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 367 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாராவின் 400 ரன்கள் சாதனையை உடைக்க இவருக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்த நிலையில் டிக்ளர் செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

- Advertisement -

சாதனையை உடைக்க வாய்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்ரிக்க அணி கைபற்றிய நிலையில் அதற்கு அடுத்ததாக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் உலக டெஸ்ட் சுழற்சியில் இல்லாததால் பல முன்னணி வீரர்கள் பங்கு பெறவில்லை. இந்த சூழ்நிலையில் வியான் முல்டர் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்த நிலையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இரட்டை சதம் அடித்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை வியான் முல்டர் தொடங்கினார்.

மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 334 பந்துகளை எதிர்கொண்டு 367 ரன்கள் குவித்த நிலையில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 626 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தார். மேற்கொண்டு சிறிது நேரம் விளையாடி இருந்தால் அவர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் லாராவின் சாதனையை தான் உடைக்க விரும்பவில்லை என அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதனால்தான் டிக்ளர் செய்தேன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த போட்டியில் விளையாடிய போது நான் என்ன நினைத்தேன் என்றால், எங்களுக்கு தேவையான ஸ்கோர் வந்துவிட்டது. எனவே பந்து வீசுவதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைத்தேன். மற்றொரு காரணம் பிரயன் லாரா ஒரு ஜாம்பவான் வீரர். அவரது சாதனைகள் உடைக்கப்படாமல் இருக்கட்டும். அவர் 400 ரன்கள் எடுத்திருந்தார். அதுவும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக அவரது சாதனை நிகழ்ந்திருந்தது.

இதையும் படிங்க:3 தலைமுறைகளாக நான் பார்த்ததில் சிறந்த ஆட்டம்..கில் பேட்டிங்கில் ஒரு தவறு கூட இல்லை.. கங்குலி பாராட்டு

அந்த இன்னிங்ஸ் உண்மையிலேயே மிகவும் சிறப்பானதாக இருந்தது. அவர் போன்ற ஒரு ஜாம்பவானுக்கு இந்த இன்னிங்ஸ் மிகவும் ஸ்பெஷல் ஆனதாக இருக்கும். எனக்கு மீண்டும் இதே போல ஒரு வாய்ப்பு கிடைத்தால் திரும்பவும் இந்த முடிவை தான் நான் எடுப்பேன். அவரது சாதனைகள் அப்படியே இருக்க வேண்டும். இதை நான் ஏற்கனவே எனது பயிற்சியாளர் இடமும் கூறிவிட்டேன் அவரும் இதனை ஒப்புக்கொண்டார்” எனக் கூறியிருக்கிறார். வியான் முல்டரின் பெருந்தன்மையான முடிவை கண்டு தற்போது ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -