இந்தியாவுல இது தினமும் கிடைக்காது.. என் பிளேயர்ஸ் நோக்கம் இது ஒன்னுதான்.. மாஸ் பண்ணிட்டாங்க – டெம்பா பவுமா மகிழ்ச்சி

0
101
Bavuma

இந்தியாவில் வைத்து இந்திய அணியை டெஸ்ட் தொடரில் வென்றது குறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்க அணி 25 ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. அதற்குப் பிறகு தற்போது டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது.

- Advertisement -

இந்தியாவில் தினமும் கிடைக்காது

இந்த வெற்றி குறித்து பேசி உள்ள டெம்பா பவுமா “நான் தனிப்பட்ட ரீதியில் சொன்னால் காயம் காரணமாக இரண்டு மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தேன். இந்தியா வந்து 2-0 என ஒரு டெஸ்ட் தொடரை எடுத்துக் கொண்டு செல்வது தினமும் நடக்காத விஷயம். எங்களுக்கும் சில இருண்ட நாட்கள் இருந்தது. அதை நாங்கள் கடந்து வந்தது பெருமையானது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் மனநிலையிலேயே மாற்றம் வந்திருக்கிறது”

“நாங்கள் போட்டிக்கு தயாராவதுதான் இங்கு முக்கியமான விஷயம். ஒவ்வொருவரும் களத்திற்கு செல்லும் பொழுது தங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எங்கள் அணியில் எந்த ஒரு வீரரும் குறிப்பிட்ட நாளில் போட்டியை மாற்ற முடிந்தவர்கள். இங்கு நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு நல்ல நம்பிக்கையை கொடுக்கும். எங்கள் அணியில் ஒவ்வொருவரும் தாங்கள் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்”

- Advertisement -

எங்கள் வீரர்கள் விருப்பம் இதுதான்

“ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அந்தப் போட்டியின் நாயகனாக இருக்க வேண்டும் என எங்கள் வீரர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் இங்கு பெரிய சதத்தை அடிக்கா விட்டாலும் கூட, நான்கைந்து வீரர்கள் சேர்ந்து ஒன்றாக அதை செய்திருக்கிறார்கள். என்னுடைய அணியை பற்றி நான் இன்னும் நிறைய சொல்லலாம்”

இதையும் படிங்க : நாங்க இன்னும் நிறைய கத்துக்கணும்.. இந்த தொடர்ல இருந்து ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கிறோம் – கேப்டன் ரிஷப் பண்ட் பேச்சு

“சைமன் ஹார்மர் 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் விளையாடிய அனுபவம் கொண்டவர். அவர் கேசவ் மகாராஜுக்கு நல்ல பார்ட்னராக இருக்கிறார். அவர் பந்தை எங்கு எப்படி நுட்பமாக போட வேண்டும் என்ற அறிவு கொண்டவர். அவரிடமிருந்து பந்தை வாங்குவதே கடினமான விஷயமாக இருக்கிறது. எங்களுக்கு இந்தத் தொடரின் மிக முக்கியமான வீரர் அவர்தான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -