நாங்க ஈஸியா பைனல்ஸ் போயிட்டோமா?. அவங்களுக்கு என்னோட பதில் இதுதான் – தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா பதிலடி

0
148

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் அணியாக தகுதி பெற்றிருக்கும் நிலையில் அதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய அணியை வீழ்த்தி இரண்டாவது அணியாக தகுதி பெற்றது.

இந்த சூழ்நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற தென்னாப்பிரிக்க அணி குறித்து விமர்சனங்கள் எழுகிற நிலையில் அது குறித்து தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை பொறுத்தவரை தென்னாப்பிரிக்க அணி மொத்தமாக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதாவது மற்ற சர்வதேச நாடுகள் விளையாடும் டெஸ்ட் போட்டிகளை காட்டிலும் இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தென் ஆப்பிரிக்கா அணி குறைந்த போட்டிகளில் விளையாடும் விதமாக அட்டவணை அமைந்திருக்கிறது. இருப்பினும் தென் ஆப்பிரிக்கா ஆசிய கண்டத்திலோ அல்லது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற முன்னணி கிரிக்கெட் நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை.

பாகிஸ்தான்,இலங்கை, நியூசிலாந்து போன்ற அணிகளிடம் டெஸ்ட் தொடர் விளையாடிய நிலையில் அதில் சில வெற்றிகளை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தென் ஆப்பிரிக்க அணிக்கு குறைந்த போட்டிகள் கொண்ட அட்டவணை அமைந்ததை அடுத்து இனிமேலாவது அனைத்து அணிகளுக்கும் ஒரே மாதிரியாக அட்டவணை இருக்க வேண்டும் என்று மைக்கேல் வாகன் கூறினார். தற்போது விமர்சனங்கள் இதுகுறித்து எழுந்து கொண்டிருக்கும் நிலையில் கேப்டன் பவுமா இது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

என்னுடைய பதில் இதுதான்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விமர்சனங்களுக்கும் விமர்சகர்களுக்கும் நான் பதிலளிக்க விரும்பவில்லை. நாங்கள் இப்போது இறுதிப்போட்டியில் இருக்கிறோம். எனவே இதில் கவனம் செலுத்த வேண்டும். இது மட்டுமே தற்போது என்னுடைய ஒரே பதிலாக இருக்கும். தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் இன்னும் அதிகமாக கிரிக்கெட் விளையாட முயற்சி செய்கிறோம். எங்கள் திறமையை இன்னும் அதிக அளவில் நாங்கள் சோதிக்க விரும்புகிறோம். நாங்கள் இங்கு சொந்த மண்ணில் விளையாடிய இந்திய தொடரை நினைத்துப் பார்க்கிறேன்.

இதையும் படிங்க:பேட்டிங்ல ஃபார்ம் இல்ல.. ஆனா இந்த 5 இடத்தில விராட் கோலிதான் டாப் – பாக் பாசித் அலி பேட்டி

அது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இது இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் மட்டுமே என்பதால் இதில் சில எதிர்வினையான விளைவுகள் இருந்தது என்று நினைக்கிறேன். கடந்த வருடம் இங்கிலாந்து அணி 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. நாங்கள் தற்போது 12 போட்டிகளில் விளையாடியிருக்கிறோம். அதாவது இதில் நாங்கள் 50 சதவீதம் மட்டுமே விளையாடி இருக்கிறோம். எனவே அந்த வகையான வேறுபாடுகள் உங்களுக்கு புரியாது என்று நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -