டி20 உலகக் கோப்பை 2024

கோலி பைனலில் மாஸ் பண்ணி இருக்காரு.. அநியாயமா அவர பாபர் கூட கம்பேர் பண்றீங்க – அகமது சேஷாத் விமர்சனம்

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். இது குறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமது சேஷாத் விராட் கோலி மிகப்பெரிய வீரர் என்றும் அவரை பாபர் அசாமுடன் ஒப்பிட கூடாது எனவும் கண்டிப்பாக.

- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மோதிய டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விக்கெட் வேகமாக விழுந்த காரணத்தினால் ஒரு முனையில் இழுத்துப் பிடித்து விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அவரது அந்த பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 176 ரன்கள் எடுத்து, தென் ஆப்பிரிக்கா அணியை 169 ரன்களில் நிறுத்தி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த டி20 உலக கோப்பை தொடர் கொள்வதிலும் விராட் கோலி மிகவும் சுமாரான பேட்டிங் செயல்பாட்டையே வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் தன்னை நம்பிய அணி நிர்வாகத்தை ஏமாற்றாமல், முக்கியமான நேரத்தில் மிகச் சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றி சாம்பியன் ஆகவும் உதவினார்.

அதே சமயத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் அமெரிக்க அணி இடம் தோல்வி அடைந்து வெளியேறியது. அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் மிகவும் சுமாராக இருந்தது. இந்த முறையும் அவர் பவர் பிளேவில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. எனவே தற்போதும் பாகிஸ்தான் கிரிக்கெட்டை சுற்றி ஏகத்துக்கும் விமர்சனங்களும் எதிர்மறையான விஷயங்களும் பரவி இருக்கின்றன.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி குறித்து பேசி இருக்கும் அகமது சேஷாத் “விராட் கோலி நம்முடைய தலைமுறையின் ஜாம்பவான் வீரர். அவர் ஒவ்வொரு முறை களமிறங்கும் பொழுதும் ஒரே மாதிரியான உற்சாகத்தில் இருக்கிறார். தன்னுடைய கடைசி சர்வதேச டி20 போட்டியில் கூட ஒவ்வொரு விக்கெட் விழும் பொழுதும் அவர் நிற்கும் இடத்தில் இருந்து உற்சாகமாகக் கொண்டாடினார். இந்த டி20 உலகக் கோப்பையில் அவர் ஆரம்பத்தில் ரன்கள் எடுக்க வில்லை. நம்முடைய விதியில் எழுதப்பட்ட விஷயங்கள் நமக்கு நடக்கும்.

இதையும் படிங்க : விராட் கோலி டீம்ல வேண்டாமா? நானும் வீட்டுக்கு போறேன்.. தோனி செஞ்ச காரியம் – உமர் அக்மல் வெளியிட்ட தகவல்

அதே சமயத்தில் இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் யாரும் சரியாக விளையாடாத பொழுது அவர் சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றினார். அவருடைய அந்த இன்னிங்ஸ் மட்டும் இல்லை என்றால் இந்திய அணி கோப்பையை வென்று இருக்க முடியாது. அவர் ஒரு சிறந்த டி20 பாரம்பரியத்தை விட்டு செல்கிறார். அவரது இடத்தை நிரப்ப இருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். பாபர் அசாம் மற்றும் எந்த ஒரு வீரரையும் தயவு செய்து விராட் கோலி உடன் ஒப்பிடாதீர்கள்” என்று கூறி இருக்கிறார்.

Published by