டி20 உலகக் கோப்பை 2024

நான் திணறி போயிட்டேன்.. என்னால ஜீரணிக்க முடியல.. வார்த்தையே இல்லாம இருக்கேன் – டேவிட் மில்லர் உருக்கம்

கடந்த சனிக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் பார்படாஸ் மைதானத்தில் 9வது டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தென் ஆப்பிரிக்கா அணி தோற்று சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. இந்த தோல்வி அந்த அணியின் ஒட்டுமொத்த வீரர்களையும் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. தற்பொழுது இது குறித்து டேவிட் மில்லர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுவரையிலான ஐசிசி டி20 உலக கோப்பை தொடர்களில் தென்ஆப்பிரிக்கா அணி ஒரு முறை கூட எவ்வளவு பெரிய பலமான அணியாக இருந்த போதிலும் இறுதிப் போட்டிக்கு வந்தது கிடையாது. இப்படியான நிலையில் இருந்து எதிர்பார்ப்பே இல்லாமல் இந்த முறை இறுதிப் போட்டிக்கு வந்தது.

மேலும் பல நெருக்கமான போட்டிகளில் வெற்றி அடைந்திருந்தது. வழக்கமாக தென் ஆப்பிரிக்கா அணி இப்படியான நெருக்கமான போட்டிகளைத் தோற்று விடும். எனவே தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் பயணத்தின் 32 வருடத்தில் முதல் முறையாக ஐசிசி உலகக் கோப்பையை அந்த அணி வெல்லும் என்கின்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

இப்படியான நிலையில் 30 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவை என்கின்ற நிலையில், ஹென்றி கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் களத்தில் இருந்தும் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வி அடைந்தது, அந்த அணியால் நம்ப முடியாததாக இருக்கிறது. டேவிட் மில்லர் இதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து டேவிட் மில்லர் பேசும்பொழுது “நான் மிகவும் திணறிப் போய் விட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த விஷயம் விளங்குவதற்கு மிகவும் கடினமான மாத்திரை. நான் எப்படி உணர்கிறேன் என்பதை விளக்க வார்த்தைகளே கிடையாது. எனக்குத் தெரிந்த ஒன்று நான் இந்த அணியை எவ்வளவு மதிக்கிறேன் என்பதுதான்.

இதையும் படிங்க : கோலி பைனலில் மாஸ் பண்ணி இருக்காரு.. அநியாயமா அவர பாபர் கூட கம்பேர் பண்றீங்க – அகமது சேஷாத் விமர்சனம்

இந்த பயணம் முழுக்க நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. இந்த ஒரு மாதத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. நாங்கள் அதிலிருந்த எல்லா வலியையும் சகித்துக் கொண்டோம். ஆனால் இந்த அணி எல்லாவற்றையும் தாண்டி தங்கள் காலரை உயர்த்தி பயணிக்கும் என்று எனக்கு தெரியும்” என்று கூறி இருக்கிறார். தற்சமயத்தில் டேவிட் மில்லர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டார் என்ற செய்திகள் உறுதியற்றதாக வந்து கொண்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மை தெரியவில்லை!

Published by