இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு நன்றி.. அந்த விடை கிடைச்சிடுச்சு.. இனி உலக கோப்பை எங்களுக்குதான் – எய்டன் மார்க்ரம் பேச்சு

இந்திய டி20 தொடரில் தங்கள் அணி தோல்வி அடைந்திருந்தாலும் டி20 உலகக்கோப்பைக்கான விடைகள் கிடைத்து விட்டதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்கரம் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 231 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும் மிடில் ஓவர்களில் அதை தவற விட்டு தோற்றது.

இந்த இடத்தில் தோற்றோம்

இந்த தோல்வி குறித்து பேசி உள்ள எய்டன் மார்க்ரம் கூறும் பொழுது “230 ரன்களை துரத்துவது சவாலானது. எங்களுக்கு முதல் மூன்று பேட்டர்கள் சிறப்பாக அமைந்தார்கள். எங்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. ஆனால் அதை எங்களால் மிடில் ஓவர்களில் சரியாக எடுத்துச் செல்ல முடியவில்லை. டி20 உலகக் கோப்பை தொடர் இங்கு விளையாட இருப்பதால், நாங்கள் கற்றுக்கொள்ள இங்கு நிறைய பாடங்கள் இருக்கின்றன. இந்த போட்டியில் கிடைத்த பாடங்கள் மதிப்பு வாய்ந்தவையாக இருக்கும்”

“டிவால்ட் பிரிவிஸ் இந்த சவாலில் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்ததால் மூன்றாவது இடத்தில் அனுப்பினோம். அவர் சில நேரங்களில் பேட்டிங் செய்வதை மிகவும் எளிமையாக காட்டுகிறார். மேலும் t20 கிரிக்கெட்டில் பேட்டிங் ஆர்டர் என்பது நிலையானதாக இருக்காது. தற்போது இதை எல்லா அணிகளுமே செய்து வருகின்றன”

- Advertisement -

தெளிவான பதில்கள் கிடைத்திருக்கிறது

“எங்களிடம் இந்த தொடரில் பல கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கிறது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என தெளிவான சிந்தனையும் பதிலும் எங்களிடம் இருக்கிறது. நாங்கள் தரமான இந்திய அணியை எதிர்கொண்டோம். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களுக்கு நன்றி”

இதையும் படிங்க : பேட்டர் சூர்யாவ கண்டுபிடிக்க முடியல.. அவர் எங்கேயோ தொலைஞ்சு போயிட்டார் – சூர்யா வருத்தம்

“நாங்கள் இந்த தொடரின் ஆரம்பத்தில் சில பரிசோதனைகள் செய்தோம். யார் யாரை எங்கெங்கு பொருத்துவது என்று பார்த்தோம். இப்போது எங்களுக்கு தேவையான எல்லா பதில்களுமே கிடைத்திருக்கிறது. நாங்கள் எதைச் செய்தாலும் இலக்கு ஒன்றாகத்தான் இருக்கும். அது டி20 உலக கோப்பையை உயர்த்துவதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts