இந்திய அணியுடன் இந்தப் பிரச்சனை இல்லை.. இப்போ எங்க திட்டமே வேற – தென் ஆப்பிரிக்கா டி20 கேப்டன் பேட்டி

0
214

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் விளையாட இருக்கிறது. இதற்காக சில தினங்களுக்கு முன்பாக இந்திய அணியினர் தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தனர்.

இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் டி20 கேப்டன் ஆன எய்டன் மார்க்ரம் இந்திய டி20 தொடர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா தென்னாபிரிக்கா டி20 தொடர்

இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. தற்போது செயல்படும் டி20 அணிக்கு சூரியகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். முன்னணி வீரர்கள் ஆன ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் கடைசியாக வெஸ்ட் இண்டீசில் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இப்படி இருக்கும் போது இந்தியா தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்விக்கு இது பழிவாங்கும் தொடராக இருக்குமா? என்று தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரமிடம் கேட்க அவர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நாங்கள் இதை அந்த கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை

இதுகுறித்து அவர் கூறும் போது “இறுதிப் போட்டியில் விளையாடிய அதே இரண்டு அணிகள்தான் தற்போது விளையாட உள்ளன என்று நினைக்கிறேன், ஆனால் தற்போது அதன் பணியாளர்கள் மாறி இருக்கின்றனர். இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் விளையாடும் போது எப்போதுமே உற்சாகமாக இருக்கும். நாங்கள் எப்போதுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தொடர் இது.

இதையும் படிங்க:42 வயசாச்சு.. ஆனா இதுக்காகதான் நான் ஐபிஎல் ஆடனும்னு ஆசைப்படுறேன் – இங்கிலாந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டி

டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்விக்கான மறுபோட்டி அல்லது அதுபோன்ற விஷயங்கள் குறித்து எதுவும் நாங்கள் பேசவில்லை. இருப்பினும் இந்தத் தொடர் மூலமாக அது குறித்து நிறைய விஷயங்கள் பேசப்பட்டுள்ளன என்பதும் புரிந்து கொள்ளத்தக்கது. இருப்பினும் நாங்கள் எங்களது செயல் திறனில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளோம்” என்று தென் ஆப்பிரிக்கா கேப்டன் கூறி இருக்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி நாளை இரவு நடைபெற உள்ளது. எனவே இதில் இந்திய அணி வெற்றி பெறுமா? அல்லது தென்னாப்பிரிக்க அணி வெற்றி அடையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -