சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இந்த சூழ்நிலையில் தென்னாபிரிக்க அணியின் கேப்டன் ஆன எய்டன் மார்க்ரம் அந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்த விதம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 போட்டிக்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு பேட்டிங் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 151 ரன்களுக்கு நான்கு விக்கெட் மட்டுமே இழந்து நல்ல நிலையில் இருந்தது. 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த போது அதற்குப் பிறகு இந்திய அணியின் அபார எழுச்சியின் காரணமாக ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தென்னாபிரிக்க அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்ற நிலையில் இருந்தபோது ஐசிசி தொடர்களில் முக்கியமான கட்டங்களில் அழுத்தத்திற்கு உள்ளாகும் தென்னாப்பிரிக்க அணி, இந்த முறையும் அதேபோல அழுத்தத்திற்குள் சிக்கி எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை கோட்டை விட்டு உலகக் கோப்பையையும் பறி கொடுத்தது. எனது அந்த தோல்வி விரட்டியிலிருந்து தான் வெளிவந்த விதம் குறித்து எய்டன் மார்க்ரம் சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
இது குறித்து மார்க்ரம் விரிவாக கூறும்போது “ஒரு தோல்வியில் இருந்து வெளியே வருவதற்கு எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரம் கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் அதை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அப்போது இருந்த சூழ்நிலையை விட இப்போது அதை கையாள்வது சற்று எளிதாக இருக்கிறது. போதுமான நேரம் இருந்ததால் அந்த அவகாசம் இதில் இருந்து வெளிவர மிகவும் உதவியாக இருக்கும்.
அதிர்ஷ்டவசமாக நான் கிரிக்கெட்டில் இருந்து விலகி, உரையாடல்களில் இருந்து விலகி இருந்ததால் அத்தகைய விவாதங்களில் இருந்து என்னை ஒதுக்கிக் கொள்ள முடிந்தது. அந்த தருணங்களில் இருந்து மீண்டு வர வேண்டியது என்பது அவசியமான ஒன்று. ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குத் தானே அதை செய்து கொள்கிறான். இதில் மிக முக்கியமான விஷயம் இறுதியில் அதை சிறப்பாக கையாண்டு இறுதியில் நீங்கள் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறீர்கள் என்பதுதான்.
இதையும் படிங்க:இந்தியா ஆஸி டெஸ்ட் தொடர்.. நேர்மையா சொல்றேன் இந்த அணிதான் கைப்பற்றும் – ஆடம் கில்கிறிஸ்ட் கணிப்பு
அதனால் இனி எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அடுத்த நடக்க உள்ள தொடர்களில் மீண்டும் கவனத்தை செலுத்தலாம்” என்று கூறி இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா அணி அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.