ஆஸ்திரேலியா இந்திய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவில் வருகின்ற நவம்பர் மாதம் மோதிக் கொள்ள இருக்கின்றன. இந்த தொடரை எந்த அணி கைப்பற்றும் என தனது கணிப்பை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியிருக்கிறார்.
இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு இந்த வருடம் சுற்றுப் பயணம் செய்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நவம்பர் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடக்கிறது. இதற்கு அடுத்து இரண்டாவது போட்டி பகல் இரவு போட்டியாக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் பிரிஸ்பேன், மெல் போன் மற்றும் சிட்னி மைதானங்களில் நடைபெறுகின்றன.
ஆஸ்திரேலியா அணிக்கு நெருக்கடி
இந்திய அணி கடந்த இரண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் தொடரை வென்று இருக்கிறது. இதன் காரணத்தால் ஆஸ்திரேலியா அணிக்கு இந்த முறை தொடரை வெல்ல வேண்டிய கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் இதுவே அவர்களுக்கு உந்துதலாக இருக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார். மேலும் மூன்றுக்கு ஒன்று என ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றும் எனவும் கணித்திருந்தார்.
இந்த நிலையில் ஆடம் கில்கிறிஸ்ட் இந்தத் தொடரை எந்த அணி வெல்வார்கள் என்பது குறித்து தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதே சமயத்தில் அவர் தொடரில் போட்டி எந்த அளவிற்கு இருக்கும் என்று சமரசம் இல்லாமல் பேசியிருக்கிறார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி யாருக்கு?
இதுகுறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறும் பொழுது “இது இரு அணிகளுக்கும் கடினமான தொடராக இருக்கும். அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு உள்நாட்டில் சக்தியை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது. மேலும் வெளிநாடுகளுக்கு சென்று தொடரை கைப்பற்றுவது எப்படி? என்று இந்திய அணிக்கும் தெரியும். அவர்களின் வேகப்பந்துவீச்சு வரிசை சிறப்பாக இருக்கிறது. மேலும் உலகெங்கும் போட்டியிடக்கூடிய மிகச்சிறந்த பேட்டிங் வரிசையையும் வைத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் பங்களாதேஷ் தொடர்.. எப்போது எந்த சேனலில் பார்க்கலாம்.?.. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பாதி ஏமாற்றம்
நான் இந்தத் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்று கூறப் போகிறேன். அவர்கள் வெல்லக்கூடிய இடத்தில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் இது மிகவும் நெருக்கமான டெஸ்ட் தொடராக இருக்கும். மேலும் இரு அணிகளுக்கும் இடையே வெற்றி பெறுவதற்கு கடுமையான சண்டை நடக்கும்” என்று கூறியிருக்கிறார்.