இன்று டி20 உலக கோப்பை தொடரில் நேபாள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்ட போட்டி வெஸ்ட் இண்டீஸ் கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் நேபாள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நேபால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த தொடரில் சரியாக விளையாடாத துவக்க ஆட்டக்காரர் ரீசா ஹென்றிக்ஸ் இந்த முறை 49 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து அதிகபட்சமாக மிடில் வரிசையில் ஸ்டப்ஸ் 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. நேபாள் அணி தரப்பில் பந்துவீச்சில் குசால் புர்டெல் நான்கு ஓவர்கள் பந்து வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய நேபாள் அணி வலிமை மிக்க தென் ஆப்பிரிக்காவுக்கு கடுமையான போட்டியை பேட்டிங்கில் கொடுத்தது. அந்த அடியில் துவக்க ஆட்டக்காரர் ஆசிப் ஷேக் 49 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். மிடில் வரிசையில் அனில் ஷா 24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.
நேபாள் அணி 19 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு நான்கு விக்கெட் கைவசம் இருக்கஎட்டு ரன்கள் தேவைப்பட்டது.கடைசி ஓவரை தென் ஆப்பிரிக்காவின் பார்ட்மேன் வீசினார். நேபாள் அணியின் குல்சன் ஜா எதிர்கொண்டார்.
இதையும் படிங்க : நான் அடிச்சு சொல்றேன்.. வெஸ்ட் இண்டீஸ்ல அவர் வேறமாறி பெர்பார்ம் பண்ணுவாரு.. தினேஷ் கார்த்திக் நம்பிக்கை
கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ரன் எடுக்காத குல்சன் ஜா மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்தார். எனவே கடைசி மூன்று பந்துகளில் நான்கு ரன் தேவைப்பட்டது. நான்காவது பந்தில் இரண்டு ரன் எடுத்தார். எனவே கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன் தேவைப்பட்டது. இந்த நிலையில் ஐந்தாவது பந்தில் ரன் எடுக்காத அவர், ஆறாவது கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். இதனால் பரிதாபமாக நேபாள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை தவற விட்டு தோல்வியடைந்தது.தென் ஆப்பிரிக்கா தரப்பில் சம்சி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.